×

காய்ச்சலை கலாய்க்கும் ஷாலினி பாண்டே

இளம் சிவப்பு நிறத்தில் பளீரென தமன்னா, காஜல் உள்ளிட்ட ஹீரோயின்கள் வெளிமாநிலத்தவர்களே. அதே அழகுடன் கோலிவுட்டுக்கு வந்திருக்கிறார் ஷாலனி பாண்டே. மகராஷ்டிராவில் ஜபல்புரில் பிறந்தவர். டோலிவுட்டில் அர்ஜுன் ரெட்டி படத்தில் என்ட்ரி ஆகி பரபரப்பாக பேசப்பட்டார். நடிகையர் திலகம் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த ஷாலினி பாண்டே, 100 பர்சன்ட் காதல், கொரில்லா, அக்னி சிறகுகள் என 3 தமிழ், 3 தெலுங்கு என அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார்.

சிவப்பு நிற தாவணி, ஆரஞ்சு நிற பாவாடையுடன் ஸ்லிம் தோற்றத்தில் கலர்புல்லாக ஒரு புகைப்படம் வெளியிட்டிருக்கிறார். ஆனாலும் அவர் முகத்தில் ஒரு சோர்வு தென்பட்டது. தனது புகைப்படத்துக்கு அருகில், ‘உங்களுக்கு காய்ச்சலாக உணர்ந்தால் எழுந்து சூப்பராக டிரஸ் செய்துகொள்ளுங்கள்’ என்று கேப்ஷன் எழுதி தனக்கு வந்திருக்கும் காய்ச்சலை கலாய்த்திருக்கிறார் ஷாலினி. அவரது மெசேைஜ கண்ட ரசிகர்கள், ‘காய்ச்சலுக்கு இது புதுமருந்தா இருக்கே’னு கமென்ட் பகிர்கின்றனர்.

Tags : Shalini Pandey ,
× RELATED படப்பிடிப்புக்கு வருவதில்லை... ஷாலினி பாண்டே மீது புகார்