×

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மருத்துவ கலந்தாய்வு இன்று தொடக்கம்: பொது பிரிவினருக்கு ஆன்லைனில் நடக்கும்

சென்னை: தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு  இன்று தொடங்குகிறது. தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.  முதலில் விளையாட்டு பிரிவு, மாற்றுத் திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. 7.5% இட ஒதுக்கீட்டு பிரிவுக்கான கலந்தாய்வு நாளை நடைபெறுகிறது. தமிழகத்தில், அகில இந்திய ஒதுக்கீட்டு 848 இடங்கள் உட்பட மொத்தம் 8,225 இடங்கள் உள்ளன. அரசு மருத்துவக் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 6,067 இடங்கள். மேலும் பிடிஎஸ் படிப்புக்காகன 1,380 இடங்கள் அரசு ஒதுக்கீட்டில் உள்ளது. இந்தாண்டு அரசு ஒதுக்கீட்டுக்கான 22,054 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் 454 இடங்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ளன. இதேபோன்று பல் மருத்துவக் கல்லூரிகளில் 104 இடங்கள் உள்ளன. 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் மொத்தம் 558  இடங்கள் இந்தாண்டு ஒதுக்கப்பட்டுள்ளது. நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் 1,310 எம்பிபிஎஸ் இடங்களும் 740 பிடிஎஸ் இடங்களும் உள்ளன. மேலும் 216 விளையாட்டு பிரிவுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 356 விண்ணப்பங்கள் முன்னாள் படைவீர் குடும்பத்தினர் பிரிவின் கீழ் பெற்றப்பட்டன. இந்தாண்டு ஒதுக்கீட்டின்கீழ் 6,521 எம்பிபிஎஸ் இடங்களும் 1,484 பிடிஎஸ் இடங்களும் உள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் காட்டிலும் இந்தாண்டு பெற்றப்பட்ட விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளன.சிறப்பு பிரிவினர் தவிர மற்றவர்களுக்கான கலந்தாய்வு இணைய வழியில் நடைபெறும்.  பொது பிரிவினருக்கான அரசு ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு இணைய வழி மூலம் இன்று தொடங்கி 25ம் தேதி வரை நடைபெறும். முதல் சுற்றின் முடிவுகள் 26ம் தேதி இணையத்தில் வெளியிடப்படும். 27ம் தேதி மற்றும் 28ம் தேதி சான்றிதழ் சரிபார்க்கப்படும். 30ம் தேதி முதல் சுற்றின் இறுதி முடிவுகள் வெளியிடப்படும். நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு 21ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடைபெறும். …

The post எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மருத்துவ கலந்தாய்வு இன்று தொடக்கம்: பொது பிரிவினருக்கு ஆன்லைனில் நடக்கும் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...