×

ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி எதிர்த்து திருமாவளவன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

சென்னை: ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அளித்த அனுமதியை எதிர்த்து திருமாவளவன் தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது. தமிழகத்தில் அக்டோபர் 2ம் தேதி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்கும்படி பல்வேறு நிபந்தனைகளை விதித்து ஐகோர்ட் செப். 22ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதி இளந்திரையன்   விசாரித்தார். அப்போது திருமாவளவன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, செப்டம்பர் மாதம் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய மறுத்து, திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்….

The post ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி எதிர்த்து திருமாவளவன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Thirumavalavan ,RSS ,march ,Chennai ,RSS march ,Tamil Nadu ,Thirumavavavan ,Dinakaran ,
× RELATED பிரதமர் மோடி அண்மை காலமாக...