அண்ணாநகர்: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பஸ் மூலம் கஞ்சா கடத்தப்படுவதாக, கோயம்பேடு துணை ஆணையர் குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் மாறுவேடத்தில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, பேருந்து ஒன்றில் வந்த வாலிபர் சந்தேகத்திற்கிடமாக பஸ்சில் இருந்து பார்சலை இறக்கிக்கொண்டு இருந்தார். இதையடுத்து, அந்த வாலிபரை மடக்கிப்பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனால், அவரை கோயம்பேடு காவல் நிலையம் அழைத்து வந்து விசரரணை நடத்தினர். அதில், அவர் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த பாபி பிஸ்வாஸ் (24) என்பதும், சென்னை கேளம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்ததும், திரிபுராவில் இருந்து பேருந்தில் கஞ்சா கடத்தி வந்து, கேளம்பாக்கம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இவரிடம் இருந்து 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்….
The post கஞ்சா கடத்திய வடமாநிலத்தவர் கைது appeared first on Dinakaran.
