×

கமென்ட் பார்த்து கடுப்பான ஓவியா

கவர்ச்சி ஹீரோயினாக மாறி வரும் ஓவியா, நடிகர் ஆரவுடனான காதல் சர்ச்சையிலிருந்து மீளவில்லை. ஓவியா என்ன செய்தாலும் ஓவியா ஆர்மி ரசிகர்கள் பாராட்டி வந்த நிலையில் 90 எம்எல் படத்துக்கு பிறகு ஓவியா எது செய்தாலும் அதை நக்கலடிக்கும் குரூப்பும் உருவாகிவிட்டது. பாராட்டும் போது சிரிக்கும் ஓவியா சீண்டினால் பெண் சிங்கமாகி விடுகிறார். சமீபத்தில் ரசிகர்களின் கேள்விக்கு இணைய தளத்தில் ஓவியா பதில் அளித்தார். அப்போது ஒரு ரசிகர்,’என்னை திருமணம் செய்துகொள்ள தயாரா?’ என்றார்.

அதற்கு ஓவியா பதில் அளிப்பதற்கு முன்பாக குறுக்கே பாய்ந்த விஷமி ரசிகர் ஒருவர்,’ஐட்டத்தை கல்யாணம் செய்து என்ன பண்ணப்போறே..’ என்று கமென்ட் போட்டார். அதைப்பார்த்து கடுப்பான ஓவியா, ‘ஐட்டம் உங்கம்மா’ என்று பாம்பாக சீறினார்.  ஏடாகூடமாக விமர்சித்தவருக்கு ஓவியா ரசிகர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Tags :
× RELATED டேரோட் – திரைவிமர்சனம்