×

யூகோ வங்கியில் செக்யூரிட்டி ஆபீசர்

யூகோ வங்கியின் கிளைகளில் செக்யூரிட்டி ஆபீசர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.பணி: செக்யூரிட்டி ஆபீசர்.மொத்த இடங்கள்: 10 (பொது-5, ஓபிசி-2, எஸ்சி-1, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-1).சம்பளம்: ரூ.36,000- 63,840.வயது: 01.01.2022 அன்று 21 முதல் 35க்குள். எஸ்சி.,எஸ்டியினருக்கும், முன்னாள் ராணுவத்தினருக்கும் 5 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும்.தகுதி: ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் ராணுவம்/ கடற்படை/விமானப்படை கமிஷன்டு ஆபீசராக 5 ஆண்டுகள் முன்அனுபவம் அல்லது துணை ராணுவப்படைகளில் ஏதேனும் ஒன்றில் அசிஸ்டென்ட் கமான்டன்ட் அல்லது துணை ராணுவப் படையில் 8 ஆண்டுகள் இன்ஸ்பெக்டர் மற்றும் மாநில போலீசில் சப்-இன்ஸ்பெக்டர் பதவி வகித்திருக்க வேண்டும்.கட்டணம்: பொது/ஓபிசி/ பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.500/ மற்றும் எஸ்சி.,எஸ்டியினருக்கு ரூ.100/- இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.www.ucobank.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.10.2022.

The post யூகோ வங்கியில் செக்யூரிட்டி ஆபீசர் appeared first on Dinakaran.

Tags : Yugo Bank ,Dinakaran ,
× RELATED கோடை வெயிலில் உடல் உஷ்ணத்தை தணிக்கும்...