×

தொடர்மழை காரணமாக கொடைக்கானல் கீழ்மலையில் விளைநிலங்களுக்குள் புகுந்த வெள்ளம்: பயிர்கள் சேதம்

கொடைக்கானல்: கொடைக்கானலில் பெய்த தொடர்மழை காரணமாக, கீழ் மழை பகுதிகளில் விவசாய நிலங்களுக்குள் வெள்ளம் புகுந்ததால் சவ்சவ் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்தன. கனமழை காரணமாக கொடைக்கானல் நட்சத்திர ஏரி நிரம்பி வழிகிறது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக தொடர்மழை பெய்து வருகிறது. இரண்டு தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று கொடைக்கானல் கீழ்மழை பகுதியான தாண்டிக்குடி, பண்ணைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் 7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக நகர் மத்தியில் உள்ள நட்சத்திர ஏரி நிரம்பி வழிகிறது.  கொடைக்கானல்-அடுக்கம் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனையடுத்து இன்று  காலை சாலையில் விழுந்து கிடக்கும் மண் மற்றும் பாறைகளை அகற்றி சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டனர். தொடர் கனமழை காரணமாக தாண்டிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் இப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த சவ்சவ், பீன்ஸ் உள்ளிட்ட விளைபயிர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. குறிப்பாக சௌசௌ கொடிகள் மற்றும் பந்தல்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. தொடர் மழை காரணமாக  மகசூல் ெபரிதும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரண வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது….

The post தொடர்மழை காரணமாக கொடைக்கானல் கீழ்மலையில் விளைநிலங்களுக்குள் புகுந்த வெள்ளம்: பயிர்கள் சேதம் appeared first on Dinakaran.

Tags : Kodicanal ,Sawsav ,Kodakkanal ,Dinakaran ,
× RELATED தேனி, கொடைக்கானல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக கனமழை..!!