×

பாப்பாவுக்கு கால்விரலில் மோதிரம்

கண்ணுக்குள் நிலவு, 6 மெழுகுவர்த்திகள், போராளி, சுற்றுலா உள்ளிட்ட தமிழ், மலையாள படங்களில் நடித்திருப்பவர் சான்ட்ரா. அதேபோல் டிஷ்யூம், சாபூத்ரி, சுற்றுலா, மணல் நகரம் போன்ற படங்களில் நடித்திருப்பவர் பிரஜன். இருவருக்குமே படங்களில் வாய்ப்பு குறைந்ததையடுத்து டி.வி. சீரியலில் நடிக்க வந்தனர். படம், சீரியல் என ஒரு பாதையில் பயணித்த இந்த ஜோடி காதலித்து திருமணம் செய்துகொண்டது. இவர்கள் காதலை ஏற்காத குடும்பத்தினர் இருவரையும் ஒதுக்கி வைத்தனர். வருமானம் இல்லாத நிலையில் இருவரும் வேலையில் கவனம் செலுத்தினர். இதனால் திருமணம் ஆகி சில ஆண்டுகள் ஆகியும் குழந்ைத பெற்றுக்கொள்ளாமலிருந்தனர். தற்போது வாழ்க்கையை ஸ்திர தன்மைக்கு கொண்டு வந்திருக்கும் இந்த ஜோடி குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்தது. சில வாரங்களுக்கு முன் சான்ட்ரா கர்ப்பமாக இருப்பதுபோன்ற படத்தை கணவர் பிரஜன் வெளியிட்டார். இவர்களுக்கு தற்போது இரட்டை குழந்தை பிறந்திருக்கிறது. ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடித்த சந்தோஷத்தில் ஆழ்ந்த பிரஜன் குழந்தைகளுக்கு கால் விரலில் அவர்கள் பெயர் பொறித்த மோதிரம் அணிவித்திருக்கிறார்.

Tags :
× RELATED விஷாலின் ரத்னம்