×

போத்தீஸ் ஸ்வர்ண மஹாலுக்கு பிரைடல் கோல்ட் ஜூவல்லரி ஆப் தி இயர் விருது

சென்னை: போத்தீஸ் ஸ்வர்ண மஹாலுக்கு, பிரைடல் கோல்ட் ஜூவல்லரி ஆப் தி இயர் என்ற தேசிய விருது மற்றும் இந்த ஆண்டின் சிறந்த நகை விளம்பர படத்துக்கான விருது ஆகியவற்றை ஜெம் அண்ட் ஜூவல்லரி கவுன்சில் ஆப் இந்தியா வழங்கியுள்ளது. இந்த விருது, இந்திய நகைத்துறையின் ஆஸ்கராக கருதப்படுகிறது. இதில் சிறந்த விளம்பர படத்துக்கான விருது, ஆயிரம் கண்கள் விளம்பர படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விளம்பர படம், ஒரு குடும்பத்தில் தந்தைக்கும், மகளுக்கும் இடையே உள்ள அன்பையும், அக்கறையையும், உறவின் பிணைப்பையும் கூறுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு தந்தை தனது மகளை ஈன்று, வளர்த்து, கல்வி தந்து, நல்ல முறையில் வளமான எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுக்கிறார். பின்னர், தனது மகளின் திருமண நாளில், தங்களது அன்பின் பிணைப்புக்கு இணையாக போத்தீஸ் ஸ்வர்ண மஹாவின் மிகத் தூய்மையான தங்க நகைகளை அணிவித்து வளம் மிக்க மகளாக அழகு பார்த்து பேரானந்தம் அடைகிறார். இந்த தருணத்தைக் காணவே ஆயிரம் கண்கள் வேண்டும். என்பதே படத்தின் மூலக் கருவாகும். இதுகுறித்து போத்தீஸ் ரமேஷ் கூறுகையில், ‘‘எங்களின் நகை வடிவமைப்பு, கோயில் கட்டிட கலையில் உள்ளபடி, அன்னை ஆண்டாளின் வாழ்க்கையை காட்சிப்படுத்தி, அவரது வாழ்க்கையின் முத்திரையாக விளங்குகிறது. இதில், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலின் வடிவமைப்பு உன்னதம். இந்த அணிகலனில், மின்கலன்களும் தொலை உணரி மூலம் இயக்கப்படுகிறது. இதனால் ஆரம், ஒட்டியாணம் ஆகிய நகைப் பகுதிகள் உயிரோட்டமாக இயங்கி நகரும் போது, பின்னணியாக தெய்வீக இன்னிசை இனிக்கிறது. குறிப்பாக, விஷ்ணு பெருமாள் உள்ளே ஓய்வெடுப்பதை காட்டும் வகையில், முழு கோபுரமும் கம்பிரமாக எழுந்து நிற்கிறது. இந்த கோயிலில் நிழற்படம் எடுப்பது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளதால், போத்தீஸ் ஸ்வர்ண மஹாலை சேர்ந்த பொன்வினைஞர்களின் குழு, கோயில் வளாகத்தில் தங்கி, இந்த புகழ்பெற்ற தலைசிறந்த படைப்பை உருவாக்க, கோயிலுக்குள் உள்ள ஒவ்வொரு சிற்பத்தையும் துல்லியமாக கையால் வரைந்தனர். மாபெரும் விருதுபெற்ற வசீகரிக்கும் இந்த நகையின் எடை மூன்று கிலோவிற்கும் அதிகமாக உள்ளது. இதனை வடிவமைக்க 365 நாட்கள் மற்றும் 3,285 மணி நேர திறனுழைப்பு தேவைப்பட்டது. தேசிய விருதுபெற்ற மணப்பெண் நகைகள் வரும் டிசம்பர் 31ம் தேதி வரை, குரோம்பேட்டையில் உள்ள போத்தீஸ் ஸ்வர்ண மஹால் ஷோரூமில் கிடைக்கும்….

The post போத்தீஸ் ஸ்வர்ண மஹாலுக்கு பிரைடல் கோல்ட் ஜூவல்லரி ஆப் தி இயர் விருது appeared first on Dinakaran.

Tags : Bodhis Swarna Mahal ,Chennai ,Bodhis ,Swarna Mahal ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...