×

சதுரகிரி கோயில் பகுதியில் கனமழையால் ஆறு, ஓடைகளில் வெள்ளப்பெருக்கு: தாணிப்பாறை அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு

வத்திராயிருப்பு: சதுரகிரி கோயில் பகுதியில் பெய்த கனமழையால் கல்லணை ஆறு, லிங்கம் கோயில் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தாணிப்பாறை வழுக்கல் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இப்பகுதியில் நேற்று முன்தினம் மாலை இடி, மின்னலுடன் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், பிலாவடி கருப்பசாமி கோயில் ஓடை, கோரக்கர் குகை ஓடை, சங்கிலிப்பாறை ஓடை, எலும்பு ஓடை, மாங்கேனி ஓடை, தாணிப்பாறை வழுக்கல் பாறை வழியாக லிங்கம் கோயில் ஓடை வழியாக மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. வத்திராயிருப்பில் இருந்து மகாராஜபுரம் செல்லும் வழியில் உள்ள கல்லணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து கண்மாய்களுக்கு தண்ணீர் சென்றது. இதேபோல, லிங்கம் கோயில் ஓடையிலும் வெள்ளப்பெருக்கு அதிகரித்தது.      2015ஐ நினைவுபடுத்திய மழை:கடந்த 2015 மே  17ல் வைகாசி அமாவாசை தினத்தன்று சுந்தரமகாலிங்கம் கோயில் பகுதியில்  பெய்ய பலத்த மழையின் காரணமாக நீர்வரத்து ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், 9 பக்தர்கள் சிக்கி பலியாயினர். நேற்று முன்தினம் சுந்தரமகாலிங்கம் கோயிலில் விஷேசம் இல்லாததால் பக்தர்கள் வரவில்லை. இதனால், உயிர்ச்சேதம், பொருட்சேதம் ஏற்படவில்லை. நேற்று காலை தாணிப்பாறை வழுக்கல் அருவி, லிங்கம் கோயில் ஓடை உள்ளிட்ட நீர்வரத்து பகுதிகளில் தண்ணீர் குறைந்தது. ஆனால் மாலையில் சதுரகிரி மலைப்பகுதியில் மீண்டும்பலத்த மழை பெய்தது. இதனால், ஆறுகள், ஓடைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. நேற்று முன்தினம் பெய்த மழையும் 2015 மழையை நினைவு படுத்துவதாக உள்ளது என பக்தர்கள் தெரிவித்தனர்….

The post சதுரகிரி கோயில் பகுதியில் கனமழையால் ஆறு, ஓடைகளில் வெள்ளப்பெருக்கு: தாணிப்பாறை அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Chaturagiri temple ,Thanipara ,Vathirayiru ,Kallanai river ,Lingam temple ,Dinakaran ,
× RELATED வத்திராயிருப்பில் நெல் கொள்முதல்...