×

ஜெயலலிதா சிகிச்சை விவகாரம்: ராதாகிருஷ்ணன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த ஆறுமுகசாமி ஆணையம்

சென்னை: ஜெயலலிதா சிகிச்சை விவகாரத்தில் ராதாகிருஷ்ணன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ஆறுமுகசாமி ஆணையம் முன்வைத்தது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மொத்தம் 608 பக்கங்கள் கொண்ட அறிக்கையில் பரபரப்பு தகவல்கள் இடம் பெற்றுள்ளன. ஜெயலலிதா மரணத்தில் அவரது தோழி சசிகலா, உறவினர் சிவக்குமார், மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் குற்றம் செய்ததாக ஆணையம் முடிவு செய்து அவர்கள் மீது விசாரணைக்கு பரிந்துரைக்கப்படுவதாக, சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட ஜெயலலிதா மர்ம மரணம் குறித்த விசாரணை கமிஷன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவை சிறந்த சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு அழைத்து செல்லாதது ஏன்? என்ற கேள்விக்கு அத்தகைய நடவடிக்கை நமது இந்திய மருத்துவர்களை அவமானப்படுத்தும் செயலாக இருக்கும் என சுகாதார துறையின் செயலாளர் அளித்த பதில் வியப்பில் ஆழ்த்தியது என கூறியுள்ளது. கால்நடை மருத்துவரான ராதாகிருஷ்ணனை, தகுதியின் அடிப்படையில் ஒரு மருத்துவர் என கூறாமல் இருப்பதே உகந்தது என அதில் கூறப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை செயலாளரின் கூற்று சரியானவை என எடுத்துக் கொண்டாலும் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க லண்டனில் இருந்தும் சிங்கப்பூரிலிருந்தும் மருத்துவர்கள் அழைத்துவரப்பட்டனர். இது இந்திய மருத்துவர்களின் தன்முனைப்பிற்கு அழுத்தம் அளிப்பதாக இல்லையா என ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது….

The post ஜெயலலிதா சிகிச்சை விவகாரம்: ராதாகிருஷ்ணன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த ஆறுமுகசாமி ஆணையம் appeared first on Dinakaran.

Tags : Arumukasamy Commission ,Raadhakrishnan ,Chennai ,Chief Minister ,Jayalalitha ,Jayalalithah ,Aramukasamy Commission ,Radhikrishnan ,
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?