×

கிளாமர் குயின் சீக்ரெட் மேரேஜ்

முப்பது வயதை கடந்தும் திருமணம் செய்யாத நடிகைகள், உச்சத்தில் இருக்கும்போதே திருமணம், பாய்ஃபிரண்டுடன் டேட்டிங்கில் காலத்தை கழிப்பவர்கள், ரகசிய திருமணம் செய்துகொள்பவர்கள், திருமணத்துக்கு முன்பே கர்ப்பம் ஆன நடிகை என திருமண விவாகரத்தை பொறுத்தவரை பல்வேறு வகையான பாலிசியுடன் சமீபத்திய நடிகைகள் புதிய கலாசாரத்தை புகுத்தி வருகின்றனர்.

நடிகை மேக்னா நாயுடுவை ஞாபகம் இருக்கிறதா? கார்த்தியுடன் சிறுத்தை, சிம்புவுடன் சரவணா, பிரசாந்த்துடன் ஜாம்பவான், தனுஷுடன் குட்டி, உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். இவர் ரகசிய திருமணம் செய்து கொண்டது பற்றி தற்போது தகவல் வெளியிட்டிருக்கிறார். மேக்னாவும், போர்ச்சுக்கீசிய நாட்டு டென்னிஸ் வீரர் லூயிஸும் ஒரு சந்தர்ப்பத்தில் அறிமுகமாயினர்.

பிறகு ஃபேஸ்புக்கில் தங்களது நட்பை தொடர்ந்தனர். அது காதலாக மலர, இருவரும் ரகசிய திருமணம் செய்துகொண்டனர். இதுவரை திருமணம்பற்றி கடந்த 2 வருடமாக ரகசியம் பாதுகாத்து வந்த மேக்னா தற்போது அதை உடைத்திருக்கிறார். ஏற்கனவே இந்து முறைப்படி திருமணம் நடந்த நிலையில் கிறிஸ்தவ முறைப்படி விரைவில் திருமணம் நடக்க உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.

Tags : Glamor ,
× RELATED இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி விளம்பரம்...