×

ராஜமவுலி படத்திலிருந்து லண்டன் நடிகை விலகல் ஏன்?

ராஜமவுலி அடுத்து இயக்கும் ஆர் ஆர் ஆர் படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண் தேஜா நடிக்கிறார்கள். இந்த படத்தின் ஷூட்டிங் வேகமாக நடந்து வந்த நிலையில், ஜிம்மில் இருந்தபோது ராம் சரண் தேஜா காயம் அடைந்தார். இதனால் புனேயில் நடந்த ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது. அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ராம் சரண் தேஜாவுக்கு ஜோடியாக அலியா பட் நடிக்கிறார். ஜூனியர் என்டிஆர் ஜோடியாக நடிக்க லண்டனை சேர்ந்த மாடல் அழகி டெய்சி எட்கர் ஜோன்ஸ் ஒப்பந்தமானார்.

அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எதுவும் இதுவரை படமாக்கவில்லை. இந்நிலையில் படத்திலிருந்து அவர் திடீரென விலகியுள்ளார். அவருக்கு ஆங்கில படமொன்றில் வாய்ப்பு கிடைத்திருப்பதால் கால்ஷீட் பிரச்னையால் இதிலிருந்து விலகிவிட்டதாக கூறப்பட்டது. ஆனால் டெய்சி கூறும்போது, தனிப்பட்ட காரணங்களால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போயிருக்கிறது. ராஜமவுலியின் பிரமாண்ட படத்தில் நடிக்க முடியாமல் போனது வருத்தம் தருகிறது என கூறியுள்ளார்.

Tags : actress ,London ,Rajamouli ,
× RELATED நீதிமன்றத்தில் கூட பாதுகாப்பில்லை...