×

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை எதிரொலி மேட்டூர் அணையில் நீர்திறப்பு 55,000 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை வலுத்துள்ளதால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை, விநாடிக்கு 28,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று பிற்பகல் 55,000 கனஅடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகஉள்ளது. அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், உபரிநீர் அப்படியே காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  …

The post நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை எதிரொலி மேட்டூர் அணையில் நீர்திறப்பு 55,000 கனஅடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Mettur dam ,Mettur ,Cauvery ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணையை திறக்க வாய்ப்பில்லை...