×

நடிகை பியாவுக்கு செம டோஸ்; வாய்ப்புக்காக இப்படியா செய்வது

கோவா, பலே பாண்டியா, கோ, நெருங்கி வா முத்தமிடாதே, அபியும் அனுவும் படங்களில் நடித்திருப்பவர் பியா. தமிழில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்ததுடன் கவர்ச்சிக்கு ஓ கே சொல்லாமல் நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் அவருக்கு பட வாய்ப்புகள் நின்றுபோனது. இதையடுத்து கவர்ச்சியாக நடிக்க தடையில்லை என்ற நிலைக்கு மாறி ஒரு சில படங்களில் வாய்ப்பு பெற்றார். ஆனால் மற்ற ஹீரோயின்களின் கவர்ச்சிக்கு முன்பாக பியாவின் கவர்ச்சி பெரிதாக பேசப்படவில்லை.

இதில் சோர்ந்துபோனவர் விளம்பர படங்களில் நடித்து வந்தார். திடீரென்று டாப்லெஸ், டூ பிஸ் அணிந்த படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ஷாக் கொடுத்தார் பியா. அதுவும் இயக்குனர்களின் பார்வைக்கு பெரிதாக படவில்லை. தற்போது மற்றொரு டெக்னிக் செய்திருக்கிறார். டூ பீஸ் உடை அணிந்தவர் பேண்ட் அணிந்து அதற்கு ஜிப் போடாமல் கழற்றிவிட்டு போஸ் தந்து புகைப்படம் வெளியிட்டிருக்கிறார்.

அதைப்பார்த்த நெட்டிஸன்கள் சிலர் செம்ம ஹாட் என்று பாராட்டினாலும், மேலும் பலர், ‘பேண்ட் எதுக்கு போடுகிறோம் என்பதை மறந்துவிட்டீர்களே’ என்று கலாய்த்து டோஸ் விட்டிருக்கின்றனர். தனது இந்த தகிடுதத்தம் வேலையாவது இயக்குனர்களின் கண்களில் படாதா, பட வாய்ப்பு கிடைக்காதா என்று ஏக்கத்துடன் இருக்கிறாரம் பியா.

Tags : Piya ,
× RELATED சின்னத்தடாகம், 24 வீரபாண்டி...