×

மீத்தேன் வாயு கசிவு ஏற்பட்டதால் துருக்கி சுரங்கத்தில் சிக்கி 40 பேர் பலி: எஞ்சிய தொழிலாளர்களை தேடும் பணி தீவிரம்..!

அங்காரா: மீத்தேன் வாயு கசிவு காரணமாக துருக்கி சுரங்கத்தில் சிக்கி 40 பேர் பலியானதாவும், மேலும் பலர் சிக்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. துருக்கி நாட்டின் கருங்கடல் கடற்கரை பகுதியில் உள்ள அமாஸ்ராவில் நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வருகிறது. அந்த சுரங்கத்தில் இருந்து மீத்தேன் வாயு கசிவு ஏற்பட்டதால் சுரங்கத்தில் பணியாற்றிக் ெகாண்டிருந்த 40 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகினர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் சுரங்கத்தில் சிக்கியுள்ளதால் அவர்களை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து நாட்டின் சுகாதார அமைச்சர் ஃபஹ்ரெட்டின் கோகா கூறுகையில், ‘சுரங்கத்தில் இருந்து 11 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சுரங்கப்பணியில் 110 பேர் வேலை செய்து கொண்டிருந்தனர். மீத்தேன் கசிவு அறிகுறி இருந்தவுடன், அங்கிருந்தவர்களில் சிலர் தாங்களாகவே வெளியே வந்தனர்; ஆனால் அதில் சிக்கிக் கொண்டவர்களில் 40 பேர் பலியானதாக தகவல்கள் வந்துள்ளன. இரண்டு தனித்தனி பகுதிகளில் இன்னும் சுரங்கத் தொழிலாளர்கள் பலர் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன’ என்றார்….

The post மீத்தேன் வாயு கசிவு ஏற்பட்டதால் துருக்கி சுரங்கத்தில் சிக்கி 40 பேர் பலி: எஞ்சிய தொழிலாளர்களை தேடும் பணி தீவிரம்..! appeared first on Dinakaran.

Tags : Ankara ,Turkish ,Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...