×

நிக்கி கல்ராணிதான் எனக்கு இன்ஸ்பிரேஷன் - ஜீவா

ஜீவா, நிக்கி கல்ராணி, அனைகா சோடி, ஆர்ஜே பாலாஜி நடித்துள்ள படம், கீ. ஒளிப்பதிவு, அபிநந்தன். இசை, விஷால் சந்திரசேகர். கதை, திரைக்கதை, இயக்கம்: காளீஸ். அடுத்த மாதம் 12ம் தேதி வெளியாகும் இப்படம் குறித்து ஜீவா கூறியதாவது: இன்றைய அதிநவீன டெக்னாலஜி மூலம் ஏற்படும் பிரச்னைகளை மையமாக வைத்து படம் உருவாகியுள்ளது. செல்போன் வைத்துள்ள ஒவ்வொருவரும் தவறாமல் பார்க்க வேண்டிய படம் இது.

செல்போனில் நாம் செய்யும் லைக்குகள், ஷேர்கள், பதிவுகள் ஆகியவற்றின் மூலம் நடக்கும் பயங்கர சம்பவங்களின் பின்னணி என்ன என்பதை விரிவாக எடுத்துச் சொல்லும் இப்படத்தில், கம்ப்யூட்டர் ஹேக்கர் வேடத்தில் நான் நடித்துள்ளேன். வருடத்துக்கு  ஒரு படத்தில் மட்டுமே நடித்து வந்த நான், ஹீரோயின் நிக்கி கல்ராணியை பார்த்து, ஒரே வருடத்தில் பல படங்களில் நடிக்க கற்றுக்கொண்டேன். இந்த விஷயத்தில் அவர்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன். அடுத்து எனக்கு கொரில்லா, ஜிப்ஸி படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.

Tags : Nicky Kalarani ,me - Jeeva ,
× RELATED இசையமைப்பில் மீண்டும் பிஸியான ஷ்ருதி ஹாசன்.!