×

மும்பை விமானத்தில் திடீர் கோளாறு: பயணிகள் ஆர்ப்பாட்டம்

மீனம்பாக்கம்: சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு 9.40 மணியளவில் ஏர்இண்டியா விமானம் மும்பை புறப்பட தயார்நிலையில் இருந்தது. அதில் செல்லவேண்டிய 137 பயணிகள் பாதுகாப்பு சோதனைகள் முடிந்து, விமானத்தில் ஏறுவதற்கு தயாராக இருந்தனர். அதே சமயம், விமானத்தை இயக்குவதற்கு முன்பாக, அதன் இயந்திரங்களை விமானி சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது, இயந்திரத்தில் கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார். இதேநிலையில் விமானம் வானில் பறந்தால் பெரும் ஆபத்து என்பதை உணர்ந்த விமானி, ‘இந்த விமானத்தில் இயந்திரக் கோளாறு உள்ளது. எனவே, விமானத்தை இயக்க முடியாது’ என சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.இதை தொடர்ந்து, மும்பை செல்லும் ஏர்இண்டியா விமானம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதில், செல்லவேண்டிய 137 பயணிகளும் அதிர்ச்சியாகி, ‘எங்களுக்கு மாற்று விமானத்தை ஏற்பாடு செய்யுங்கள். நாங்கள் அனைவரும் உடனடியாக மும்பை செல்ல வேண்டும். அதுவரை விமான நிலையத்தை விட்டு வெளியே செல்ல மாட்டோம்’ என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பயணிகளிடம் விமானநிலைய அதிகாரிகளும் ஏர்இண்டியா ஏர்லைன்ஸ் நிறுவன அதிகாரிகளும் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் ‘அவசரமாக செல்ல வேண்டிய பயணிகளை மாற்று விமானத்தில் அனுப்பி வைக்கிறோம். மற்ற பயணிகளை நாளை (நேற்று) வேறு விமானத்தில் அனுப்புகிறோம்’ என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதற்கு பயணிகள் சம்மதிக்காமல் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அனைத்து பயணிகளையும் விமான நிலையத்தில் தங்க வைத்து உணவு வழங்குவதற்கு ஏர்இண்டியா நிறுவனம் ஏற்பாடு செய்தது. இந்நிலையில், நேற்று அதிகாலை மும்பை சென்ற மற்ற 2 விமானங்களில் 137 பயணிகளை ஏர்இந்தியா ஏர்லைன்ஸ் நிறுவன அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்….

The post மும்பை விமானத்தில் திடீர் கோளாறு: பயணிகள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Meenambakkam ,AirIndia ,Chennai ,
× RELATED மும்பை விமான நிலையத்தில் ரூ9.75 கோடி போதைப்பொருள் பறிமுதல்