×

என் பெருந்தன்மையை தவறாக பயன்படுத்துறாங்க - விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்துள்ள படம், சூப்பர் டீலக்ஸ். வரும் 28ம் தேதி  ரிலீசாகும் இப்படம் குறித்து விஜய் சேதுபதி அளித்த பேட்டி: சூப்பர் டீலக்ஸ், தமிழ் சினிமாவின் முக்கியமான படமாக இருக்கும். ஷில்பா என்ற  திருநங்கை கேரக்டரை நான் விரும்பி கேட்டு வாங்கி நடித்தேன். டைரக்டர்  தியாகராஜன் குமாரராஜா, ‘இப்போது உங்களுக்கு இருக்கும்  இமேஜூக்கு, இந்த  கேரக்டர் சரியாக இருக்குமா என்று யோசித்துக்  கொள்ளுங்கள்’என்றார்.

‘இமேஜ் பற்றி எனக்கு கவலை இல்லை. ஷில்பாவாக வாழ ஆசைப்படுகிறேன்’ என்று சொன்னேன். நான் நிறைய படங்களில் நடிப்பதாக சொல்கிறார்கள். என்னைவிட அதிக படங்களில் நடிப்பவர்களும் இருக்கிறார்கள். நிறைய படங்களில் நடிக்கிறீர்கள். ஆனால், அந்த அளவுக்கு பணம் சம்பாதித்ததாக தெரியவில்லையே என்று கேட்கிறார்கள்.  

சிலபேர்  என்னை வச்சு செய்றாங்க. எனது பெருந்தன்மையை தவறாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். என்றாலும், அவர்கள் மீது நான் கோபப்பட மாட்டேன். அவர்கள்  அப்படித்தான் என்று நினைத்துக்கொள்வேன். எனக்குப் பணம் முக்கியம் இல்லை. பணம்  நாளைக்கே கரைந்துவிடும். என்ன செய்தோம் என்ற செயல்தான் முக்கியம்.   அதற்காகத்தான் உழைக்கிறேன்.

Tags : Vijay Sethupathi ,
× RELATED விஜய் சேதுபதி படத்தில் மம்தா மோகன் தாஸ்