×

சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் கீழ் கூவம் ஆற்றங்கரைகளில் ரூ.7.13 கோடி மதிப்பீட்டில் பாரம்பரிய மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டம்..!!

சென்னை: சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை நிதியின் கீழ் கூவம் ஆற்றங்கரைகளில் ரூ.7.13 கோடி மதிப்பீட்டில் 11.3 கி.மீ. நீளத்திற்கு 64,663 பாரம்பரிய மரக்கன்றுகள் மற்றும் சிறிய வகை செடிகள் நடவு செய்யப்பட உள்ளன. சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் சார்பில் அடையாறு, கூவம் போன்ற ஆற்றங்கரைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கரைகளை சமப்படுத்துதல், திடக்கழிவுகளை அகற்றுதல், மரக்கன்றுகளை நடுதல் மற்றும் தடுப்புவேலிகளை அமைத்தல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதனடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அடையாறு ஆற்றங்கரையில்  திரு.வி.க. நகர் பாலம் முதல் MRTS பாலம் வரை ரூ.5.4 கோடி மதிப்பிலும்,  MRTS பாலம் முதல் கோட்டூர்புரம் பாலம் வரை ரூ.5.8 கோடி மதிப்பிலும் நடைபாதை அமைத்தல், மரங்கள் நடுதல் போன்ற பணிகளும் CRRT திட்டத்தில்  மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், ஆலந்தூர் மண்டலத்திற்குட்பட்ட அடையாறு ஆற்றங்கரையில் மீனம்பாக்கம் விமான நிலைய ஓடுதளம் அருகே உள்ள மேம்பாலம் முதல் நந்தம்பாக்கம் பாலம் வரை இடதுபுறத்தில் 3.9 கி.மீ. நீளத்தில் 16,955 ச.அ. பரப்பளவுள்ள இடத்தில் ரூ.1.41 கோடி மதிப்பீட்டில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி, வலதுபுறத்தில் 4 கி.மீ. நீளத்தில் 13,312 ச.அ. பரப்பளவுள்ள இடத்தில் ரூ.1.17 கோடி மதிப்பீட்டில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.இதன் தொடர்ச்சியாக, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட இராயபுரம், அம்பத்தூர் மற்றும் வளசரவாக்கம் மண்டலத்திற்குட்பட்ட கூவம் ஆற்றங்கரையோரங்களில் 4 பகுதிகளில் கரைகளை சமப்படுத்தி, பாரம்பரிய மரக்கன்றுகளான அரச மரம், ஆலமரம், மகிழம், மலைவேம்பு, அசோகமரம், பூவரசு, புங்கன், கல்யாண முருங்கை, மருத மரம், புன்னை, வேம்பு, இலுப்பை, கொய்யா, நொச்சி உட்பட 43 வகையான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளன.  இதற்கான ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டு தற்சமயம் கரைகளை சமப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. காயிதே மில்லத் பாலம் முதல் லாஸ் பாலம் (Law’s Bridge) வரை இராயபுரம் மண்டலம், வார்டு-59க்குட்பட்ட கூவம் ஆற்றங்கரையோரங்களில் காயிதே மில்லத் பாலம் முதல் லாஸ் பாலம் (Law’s Bridge) வரை 2.12 கி.மீ. நீளத்திற்கு 22,990 ச.மீ. பரப்பளவில் ரூ.1.73 கோடி மதிப்பீட்டில் 15,000 மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.நேப்பியர் பாலம் முதல் காயிதே மில்லத் பாலம் வரை இராயபுரம் மண்டலம், வார்டு-60க்குட்பட்ட கூவம் ஆற்றங்கரையோரங்களில் நேப்பியர் பாலம் முதல் காயிதே மில்லத் பாலம் வரை 2.1 கி.மீ. நீளத்திற்கு 20,325 ச.மீ. பரப்பளவில் ரூ.1.78 கோடி மதிப்பீட்டில் 14,300 மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.தாய் மூகாம்பிகை பல் மருத்துவமனை கல்லூரி வளாகம் முதல் பாடிக்குப்பம் மயானபூமி வரை, அம்பத்தூர் மண்டலம், வார்டு-93க்குட்பட்ட கூவம் ஆற்றங்கரையோரங்களில் தாய் மூகாம்பிகை பல் மருத்துவமனை கல்லூரி வளாகம் முதல் பாடிக்குப்பம் மயானபூமி வரை 1.3 கி.மீ. நீளத்திற்கு 11,800 ச.மீ. பரப்பளவில் ரூ.1.04 கோடி மதிப்பீட்டில் 14,050 மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.இரயில் நகர் பாலம் முதல் மாநகராட்சி எல்லை வரை, வளசரவாக்கம் மண்டலம், வார்டு-143, 144, 145, 146 மற்றும் 150க்குட்பட்ட கூவம் ஆற்றங்கரையோரங்களில் இரயில் நகர் பாலம் முதல் மாநகராட்சி எல்லை வரை 5.7 கி.மீ. நீளத்திற்கு 28,805 ச.மீ. பரப்பளவில் ரூ.2.58 கோடி மதிப்பீட்டில் 21,313 மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இராயபுரம் மண்டலம், வார்டு-59க்குட்பட்ட காயிதே மில்லத் பாலம் முதல் லாஸ் பாலம் வரை மற்றும் வார்டு-60க்குட்பட்ட நேப்பியர் பாலம் முதல் காயிதே மில்லத் பாலம் வரை கூவம் ஆற்றங்கரையின் சரிவுகளில் அலையாத்தி இனத் தாவர வகைகள் (Mangrove Trees) நடவு செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன….

The post சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் கீழ் கூவம் ஆற்றங்கரைகளில் ரூ.7.13 கோடி மதிப்பீட்டில் பாரம்பரிய மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Kouvam rivers ,Chennai Rivers Realignment Foundation ,Chennai ,Chennai Rivers Realignment Foundation Fund ,Kovam Rivers ,Chennai Rivers Renovation Foundation ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...