×

கீழ்ப்பாக்கம் மருத்துவர் தற்கொலை கணவர், மாமியார் விடுதலை: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சென்னை: மருத்துவர் அமலி விக்டோரியா மரணம் தொடர்பான வழக்கில் அவரது கணவர், மாமியாரை விடுவித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.   சென்னை, கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றிய அமலி விக்டோரியா, கடந்த 2014 நவம்பர் 5ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்தார். இது தொடர்பான வழக்கை விசாரித்த  சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம், அமலியின் கணவர் புருனோவ், மாமியார் அல்போன்சா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது எனக் கூறி இருவருக்கும் 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இதை சென்னை உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது.இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து புருனோவும், அல்போன்சாவும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் வாதங்கள் முடிந்த நிலையில், நீதிபதி எம்.ஆர்.ஷா அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது.  அதில், ‘உயர் நீதிமன்றமும், மகளிர் சிறப்பு நீதிமன்றமும் வழங்கிய உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. குற்றவாளிகளாக இருக்கும் புருனோவ், அல்போன்சா விடுவிக்கப்படுகின்றனர்,’ என உத்தரவிடப்பட்டது….

The post கீழ்ப்பாக்கம் மருத்துவர் தற்கொலை கணவர், மாமியார் விடுதலை: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Killpakkam ,Supreme Court ,Chennai ,Dr. ,Amalie Victoria ,Kilpakkam ,Dinakaran ,
× RELATED நீட் வினாத்தாள் கசிவு: தேர்வை மீண்டும் நடத்தக்கோரி மனு