×

ஏழைகளின் ஊட்டியான ஏலகிரியில் சேதமடைந்த 10வது கொண்டை ஊசி வளைவை அதிகாரிகள் ஆய்வு: விரைவில் சரி செய்யப்படும் என உறுதி

ஏலகிரி:  ஏழைகளின் ஊட்டியான ஏலகிரியில் சேதமடைந்த அடைந்த 10வது கொண்டை ஊசி வளைவை உதவி கோட்ட பொறியாளர், உதவி பொறியாளர் நேற்று ஆய்வு செய்தனர். இதனை விரைவில் சரி செய்யப்படும் என்று தெரிவித்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலை உயரமான மலைப் பகுதியில் அமைந்துள்ளது.ஏலகிரி மலை நான்கு புறமும் உயர்ந்த மலைகளால் சூழப்பட்டு இதன் மத்தியில் 14 சிறிய கிராமங்களை கொண்டுள்ளது. இது தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. மேலும் ஏலகிரி மலை தமிழ்நாட்டில் உள்ள கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு போன்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக ஏலகிரி மலை விளங்குகிறது. இதில், 10வது கொண்டை ஊசி வளைவில் சாலைகள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. இச்சாலையின் அடிப்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது என நேற்று தினகரனில் விரிவான செய்தி படம் வெளியானது.இதன் எதிரொலியாக நேற்று உதவி கோட்ட பொறியாளர் மணி சுந்தரம், உதவி பொறியாளர் சீனிவாசன், சாலை ஆய்வாளர் எஸ்.வெங்கடேசன் மற்றும் சாலை பணியாளர்கள் ஆகியோர் மண் அரிப்பு ஏற்பட்ட பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், சாலையின் பக்க வாட்டில் தடுப்பு சுவர் எழுப்பப்படும் என்று உறுதி அளித்தனர். இதனால் வாகன ஓட்டிகளும் சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்….

The post ஏழைகளின் ஊட்டியான ஏலகிரியில் சேதமடைந்த 10வது கொண்டை ஊசி வளைவை அதிகாரிகள் ஆய்வு: விரைவில் சரி செய்யப்படும் என உறுதி appeared first on Dinakaran.

Tags : needle ,Elagiri ,
× RELATED ஏற்காடு 11-வது கொண்டை ஊசி...