×

ரெங்கநாத பெருமாள் திருக்கோயிலுக்கு சொந்தமான ரூ.1.80 கோடி மதிப்பிலான கட்டிடம் சுவாதீனம் பெறப்பட்டது!

சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தலின்பேரில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி, சென்னை, சௌகார்பேட்டை, அருள்மிகு ரெங்கநாத பெருமாள் திருக்கோயிலுக்கு சொந்தமான 850 சதுர அடி பரப்பிலான கட்டிடம் திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது. சென்னை, சௌகார்பேட்டை, முல்லா தெரு, அருள்மிகு ரெங்கநாத பெருமாள் திருக்கோயிலுக்கு சொந்தமாக ஆதியப்ப நாயக்கன் தெருவில் 850 சதுர அடி பரப்பிலான இரண்டு தளங்கள் கொண்ட கட்டிடம் வாடகைக்கு விடப்பட்டிருந்தது. இந்த கட்டிடம் மூன்றாம் நபர்கள் ஆக்கிரமிப்பிலிருந்ததால், சட்டபிரிவு 34 -ன் படி வாடகைதாரரின் உரிமையை ரத்து செய்து விட்டு இன்று (13.10.2022) வருவாய் மற்றும் காவல் துறை உதவியுடன் சுவாதீனம் பெறப்பட்டது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.1.80 கோடி ஆகும்.இந்நிகழ்வுகளின்போது இந்து சமய அறநிலையத்துறை சென்னை மண்டல உதவி ஆணையர் எம். பாஸ்கரன், வட்டாட்சியர் (ஆலய நிர்வாகம்) காளியப்பன் மற்றும் திருக்கோயில் அலுவலர்கள் உடனிருந்தனர்….

The post ரெங்கநாத பெருமாள் திருக்கோயிலுக்கு சொந்தமான ரூ.1.80 கோடி மதிப்பிலான கட்டிடம் சுவாதீனம் பெறப்பட்டது! appeared first on Dinakaran.

Tags : Renganatha Perumal Temple ,Chennai ,Tamil ,Nadu ,Chief Minister ,M.K.Stal ,Minister ,Hindu ,Religious ,Charities ,Shekharbabu ,Hindu Religious Charities Department ,
× RELATED தேவகோட்டை பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்