×

கோடியக்கரையில் சீசன் களைகட்டியது; 1 லட்சம் வெளிநாட்டு பறவைகள் குவிந்தது: சுற்றுலா பயணிகள் உற்சாகம்

வேதாரண்யம்: கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் சீசன் களைகட்ட துவங்கி உள்ளது. 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு பறவைகள் குவிந்துள்ளதால், சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் கண்டுகளித்து வருகின்றனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் உள்ளது. ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை பல்வேறு நாடுகளில் இருந்து 247 வகையான பறவைகள் இனப்பெருக்கத்திற்காக இங்கு வந்து தங்கி செல்வது வழக்கம். சைபீரியா, ஈரான், ஈராக் நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கில் வரும் நான்கு அடி உயரமுள்ள அழகுமிகு பூநாரை (பிளமிங்கோ) கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு வருவது தனிச்சிறப்பு.இந்த ஆண்டு சரணாலயத்திற்கு இமாச்சல பிரதேசத்தில் இருந்து 58 ஆண்டுகளுக்கு பிறகு “ஹிமாலய கிரிபன் கழுகு” மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு வரித்தலை வாத்து வந்துள்ளது. தற்போது பறவைகள் வாழ்வதற்கு உகந்த சூழ்நிலை நிலவுவதால், இந்த சரணாலயத்திற்கு புதிய வரவாக ஆர்டிக் பிரதேசத்தில் இருந்து 22 ஆயிரம் கி.மீ தொலைவை கடந்து குயில் வடிவில் காணப்படும் அமூர் பால்கன் பறவைகள் வந்துள்ளது.அக்டோபர் மாத தொடக்கத்திலேயே இதுவரை ஒரு லட்சத்திற்கு மேல் பறவைகள் கோடியக்கரை சரணாலயத்திற்கு வந்து குவிந்துள்ளன. புதுப்புது வகையான வெளிநாட்டு பறவைகள் கோடியக்கரை சரணாலயத்திற்கு வருகை தந்து கூட்டம் கூட்டமாக இரை தேடும் அழகு கண்கொள்ளா காட்சியாக உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் படையெடுக்க துவங்கியுள்ளனர்….

The post கோடியக்கரையில் சீசன் களைகட்டியது; 1 லட்சம் வெளிநாட்டு பறவைகள் குவிந்தது: சுற்றுலா பயணிகள் உற்சாகம் appeared first on Dinakaran.

Tags : Kodiyakaray ,Kodiyakar Bird Sanctuary ,Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...