×

ஞானவாபி தீர்ப்பு மீண்டும் ஒத்திவைப்பு

புதுடெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம், வாரணசியில் காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு அருகில் உள்ள ஞானவாபி மசூதியின் வெளிப்புற சுவரில் உள்ள இந்துக் கடவுள் சிலையை வழிபட அனுமதி கோரி, இந்துப் பெண்கள் சார்பில் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஞானவாபி மசூதியில் கள ஆய்வின்போது, மசூதி வளாகத்துக்குள் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டதாக புகைப்படங்கள் வெளியானது. இந்த விவகாரத்தில் உண்மையை கண்டறிய கார்பன் டேட்டிங் பரிசோதனைக்கு உட்படுத்த அனுமதிக்க கோரிய வழக்கை விசாரித்த ஞானவாபி மாவட்ட நீதிமன்றத்தில் தீர்ப்பு ஒத்திவைப்பட்டது. கடந்த 7ம் தேதி வழங்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில், நேற்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. மேற்கண்ட வழக்கில் தீர்ப்பை வழங்க நீதிபதி விஷ்வேஷா அறைக்குள் நேற்று வந்தபோது, இந்து வழிபாட்டாளர்களின் கோரிக்கையை ஏற்று தீர்ப்பை வரும் 14ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதோடு மூன்று முறை இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்….

The post ஞானவாபி தீர்ப்பு மீண்டும் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Gnanavabi ,New Delhi ,Hindu ,Gnanavabi Masjid ,Kashi Vishwanath Temple ,Varanasi, Uttar Pradesh ,
× RELATED தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில்...