×

தமிழக வனப்பகுதிகளில் அந்நிய மரம் அகற்றும் பணியில் தனித்தனி குழு அமைக்க வேண்டும்: சென்னை உயர்நிதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் வனப்பகுதிகளில் பரவும் அந்நிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு வனப்பகுதியில் அந்திய மரங்களை அகற்றும் பணிகளை கண்காணிக்க தனித்தனி குழுவை அமைக்க வேண்டும் என்று வனத்துறைக்கு ஐகோர்ட் ஆணை பிறப்பித்துள்ளது. உயர்நிதிமன்ற வளாகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க மஞ்சப்பை வழங்கும் எந்திரம் வைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. கண்காணிப்புக்கும், பராமரிப்புக்கும் தனித்தனி குழுக்களை அமைக்க முதன்மை தலைமை வனப் பாதுகாவலருக்கு ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. தமிழக வனப்பகுதிகளில் உள்ள அந்நிய மரங்களை அகற்ற போர்க்கால அடிப்படையில் தீவிரம் காட்டி நடவடிக்கை எடுக்காவிட்டால் அந்நிய மரங்கள் வேகமாக பரவி தீவிர தாக்கத்தை ஏற்படுத்தி வனத்தை அழித்து விடும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அப்போது, முதுமலை வனப்பகுதியில் அந்நிய மரங்களை அகற்ற தமிழ்நாடு காகித நிறுவனத்தை நியமிப்பது  தொடர்பான கருத்து, நிதித்துறை பரிசீலனைக்கு அனுப்பபட்டுள்ளதாக கூறி, தமிழக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அந்நிய மரங்களை அகற்ற ஏன் தீவிரம் காட்டவில்லை எனவும், தனியார் நிறுவனங்களின் சமூக பாதுகாப்பு நிதியை ஏன் பயன்படுத்தக் கூடாது எனவும் கேள்வி எழுப்பினர். நீதிபதிகள் அந்நிய மரங்களை அகற்ற தமிழ்நாடு காகித நிறுவனத்தை நியமிப்பது தொடர்பான உத்தரவை பிறப்பிக்க அரசுக்கு அக்டோபர் 11-ம் தேதி வரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர். மேலும், அன்னிய மரங்களை அகற்றும் பணிகளை மெதுவாக செயல்படுத்துவதால் எந்த பயனும் இல்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், சுற்றுச்சூழலையும், வனத்தையும் பாதுகாக்க அரசு முன்னுரிமை வழங்க வேண்டும் என அறிவுறுத்தினர். இந்நிலையில் இந்த வழக்கு விசாரனைக்கு வந்தது அந்நிய மரம் அகற்றும் பணியில் தனித்தனி குழு அமைக்க வேண்டும் என்று சென்னை உயர்நிதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. …

The post தமிழக வனப்பகுதிகளில் அந்நிய மரம் அகற்றும் பணியில் தனித்தனி குழு அமைக்க வேண்டும்: சென்னை உயர்நிதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Separate committee ,Tamil Nadu ,Chennai High Board ,Chennai ,Satishkumar ,Bharatha Sakkavarthi ,Separate Group ,Chennai High Court ,
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...