×

சீனாவின் தொழில்நுட்ப பயன்பாட்டால் உலக பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்; இங்கிலாந்து உளவு தலைவர் எச்சரிக்கை

லண்டன்: இங்கிலாந்து நாட்டின் உயர்மட்ட இணைய உளவாளியும், ஜிசிஹெச்ஓ உளவு அமைப்பின் இயக்குனருமான ஜெர்மி ஃப்ளெமிங் அளித்த பேட்டியில், ‘உலகத்தின் பாதுகாப்பிற்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் சீனா தனது உயர் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகிறது. அதற்காக சீனா தனது நிதி மற்றும் விஞ்ஞானத் திறனை முழுமையாக பயன்படுத்துகிறது. சீனாவின் இதுபோன்ற நடவடிக்கைகள் நம் அனைவருக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறும். மேலும் டிஜிட்டல் நாணயங்கள் மற்றும் அதன் செயற்கைக்கோள் நெட்வொர்க் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தனது நாட்டின் மக்களுக்கும் பலவகைகளில் நெருக்கடியை கொடுக்க முற்பட்டுள்ளது. சீனாவின் தொழில்நுட்ப கையாளுதல் முறையானது வளர்ந்துவரும் நாடுகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது’ என்றார்….

The post சீனாவின் தொழில்நுட்ப பயன்பாட்டால் உலக பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்; இங்கிலாந்து உளவு தலைவர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : China ,UK ,London ,Jeremy Fleming ,GHO intelligence ,Dinakaran ,
× RELATED தென் சீன கடலுக்கு பயணம்: 3 இந்திய போர் கப்பல்கள் சிங்கப்பூர் சென்றடைந்தன