×

தீபம் ஏற்றி மனதார பூஜை செய்யுங்கள்!: வெள்ளிக்கிழமை அம்மனை வழிபாடு செய்தால் வீட்டில் நிம்மதி நிலவும்..!!

வெள்ளிக்கிழமை தினத்தில் மட்டுமாவது காலை, பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே வீட்டில் பூஜை செய்வது மிகவும் நல்லது என்று சொல்லப்பட்டுள்ளது.

வீட்டில் உள்ளவர்கள் நிம்மதியாக வாழ, தேவையற்ற பிரச்னைகள் வராமல் இருக்க அந்த வீட்டில் இருக்கும் பெண்கள் வெள்ளிக்கிழமை வழிபாட்டை செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் அம்னை வழிப்பட்டால் நல்லது. அந்த வழிபாட்டை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாகவே வெள்ளிக்கிழமை என்றதுமே பெண்கள், வியாழக்கிழமை அன்றே தங்களுடைய வீட்டை சுத்தம் செய்து விடுவார்கள். வெள்ளிக்கிழமை காலையில் பூஜை செய்வதற்கு தேவையான பூக்களை தயார் செய்துவிடுவார்கள். அதிலும் குறிப்பாக வெள்ளிக்கிழமை தினத்தில் மட்டுமாவது காலை, பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே வீட்டில் பூஜை செய்வது மிகவும் நல்லது என்று சொல்லப்பட்டுள்ளது.

பிரம்ம முகூர்த்த நேரம் என்றால், காலை 5 மணி அளவில் கண்முழித்து விட்டு, வாசல் கூட்டி மாக்கோலம் இட்டு, 6 மணிக்கு முன்பாக வீட்டில் தீபம் ஏற்றி, உங்கள் வீட்டில் இருக்கும் அம்மனின் திரு உருவப் படத்தை உற்று நோக்கி, மனதார பூஜை செய்வதாகும்.

தீபம் ஏற்றி வைத்துவிட்டு அந்த தீப ஒளியில், நீங்கள் அம்மனை வழிபாடு செய்யும்போது, அந்த அம்மனின் முகத்தில் இருக்கும் அமைதி, அம்மனின் கண்களை பார்ப்பதன் மூலம் நம் சிந்தனைகள் அனைத்தும் நேர்மறையாகவே இருக்கும். மேலும் கண்களை திறந்து அம்மனை பார்த்து முழுமனதோடு தரிசனம் செய்து வேண்டுதல் வைக்க வேண்டும்.

இப்படி ஒருவர் தொடர்ந்து 3 வாரம் வெள்ளிக்கிழமை விரதத்தை கடைபிடித்து வந்தால் லட்சுமி, முருகன், சுக்ரன் ஆகிய மூவரின் அருளையும் ஒருங்கே பெறலாம் என்பது நம்பிக்கை.

Tags :
× RELATED வேண்டுவோருக்கு வேண்டியதை அளிக்கும் வெக்காளி அம்மன்