×

மாடல் அழகியை காதலிக்கும் காளிதாஸ்

சென்னை: பிரபல நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ். மீன் குழம்பும் மண்பானையும் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். அதன்பிறகு தமிழ், மலையாள படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில் கமலின் மகனாக நடித்திருந்தார். அண்மையில் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் காளிதாஸ், சமீபகாலமாக பிரபல மாடல் அழகி தாரிணி காளிங்கராயருடன் நெருக்கமாக இருக்கும் படங்களை வெளியிட்டு வருகிறார். துபாயில் எடுத்துக் கொண்ட ஒரு படத்துடன் காதல் குறியீட்டையும் வெளியிட்டிருந்தார். இதனால் இருவரும் காதலித்து வருவது உறுதியாகி உள்ளது. இந்த நிலையில ஜெயராம் குடும்பத்தின் நிகழ்ச்சி ஒன்றிலும் தாரிணி கலந்து கொண்ட படமும் வெளியாகி உள்ளது. இதனால் இருவர் காதலுக்கு ஜெயராம் குடும்பத்தினர் ஒப்புதல் கொடுத்து விட்டனர் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. தாரிணி காளிங்கராயர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் மிஸ்.தமிழ்நாடு பட்டம் வென்றதன் மூலம் மாடலிங் துறையில் நுழைந்தவர். மிஸ்.யுனிவர்ஸ போட்டியில் 3ம் இடம் பிடித்தவர். தற்போது விளம்பர படங்களில் நடித்து வருகிறார்….

The post மாடல் அழகியை காதலிக்கும் காளிதாஸ் appeared first on Dinakaran.

Tags : Kalidas ,Chennai ,Jayaram ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...