×

சூப்பர் நேச்சுரல் திரில்லர் தி பிளாக் பைபிள்

சென்னை: ‘தி பிளாக் பைபிள்’ படத்தை அறிமுக இயக்குனர் மணிகண்டன் ராமலிங்கம் எழுதி இயக்கியுள்ளார். இந்தப் படத்தை இபிஎஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு பாலா ஜி. ராமசாமி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள, அஸ்வின் கிருஷ்ணா இசையமைத்துள்ளார்.சுழல் வெப்சீரிஸில் நடித்த எஃப்.ஜே., இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சாந்தினி தமிழரசன், ஸ்ரீஜா ரவி, மோனா பெத்ரா மற்றும் அய்ரா பாலக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

தமிழ்நாடு-கேரள எல்லையில் அமைந்துள்ள அஸ்தினாபுரம் என்ற நிழல் கிராமத்தில் இந்தப் படத்தின் கதை நடக்கிறது. காலனித்துவ கால மாந்திரீகம் மற்றும் சூனியத்தால் நீண்ட காலமாக சபிக்கப்பட்ட ஒரு நிலத்தின் பிடியிலிருந்து தப்பிக்க துடிக்கும் இரண்டு பெண்கள் அலிஷா மற்றும் அவரது தாயாரைச் சுற்றி கதை சுழல்கிறது.

ஆனால் அவர்கள் தப்பி ஓட முயற்சிக்கும்போது, அவர்கள் நினைத்ததை விட ஆழமான, ஆபத்தான ஒரு இடத்திற்குள் சிக்கிக் கொள்கிறார்கள். அலிஷாவின் காதலன் மட்டுமே அவர்களுடன் நிற்கும் நிலையில், மூவரும் அமைதிக்கு பின் இருக்கும் பயங்கரங்களையும், அதில் இருந்து தப்பிக்க மறுக்கும் சாபத்தையும் எதிர்கொள்ள வேண்டும் என்பதை கதை.

Tags : Chennai ,Manikandan Ramalingam ,EPS Pictures ,Bala G. Ramasamy ,Ashwin Krishna ,
× RELATED ‘பிச்சைக்காரன்‘ பட வாய்ப்பை மிஸ்...