கோலிவுட் நடிகைகள் போல் சைவத்துக்கு மாறிய ஹாலிவுட் நடிகை

ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பல்வேறு கோலிவுட் நடிகைகள் அசைவ உணவை கைவிட்டு சைவத்துக்கு மாறிவிட்டனர். ஹாலிவுட் நடிகைகளும் சைவத்துக்கு மாறிவருகின்றனர். தி டெர்மினேட்டர், ஏலியன்ஸ், டைட்டானிக் போன்ற பல்வேறு ஹாலிவுட் படங்களை இயக்கிய ஜேம்ஸ் கேம்ரூன் தற்போது ‘அலிடா, பேட்டல் ஏஞ்செல்’ படம் தயாரிக்கிறார். ராபர்ட் ரோட்டரிகெஸ் இயக்குகிறார். இதில் ரோசா சலாஸர் ஹீரோயினாக நடிக்கிறார். இவர் இப்படத்துக்காக சைவ உணவுக்கு மாறியிருக்கிறார்.

இதுபற்றி ரோசா கூறும்ேபாது,’ராபர்ட் ரோட்ரிகஸ் லத்தீன்காரர். அவர் இயக்கிய டெஸ்ப்ரேடோ படத்தை சிறுவயதில் என் அம்மாவுடன் சென்று பார்த்திருக்கிறேன். தற்போது அவர் இயக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறேன். ஜேம்ஸ்கேம்ரூன், ராபர்ட் இருவருமே பெண் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் தருபவர்கள். இதில் ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்க வேண்டியிருந்தது. அதற்காக மாதக்கணக்கில் பயிற்சி எடுத்தேன். அசைவ உணவை கைவிட்டு சைவ உணவுக்கு மாறினேன். தற்போது ஒரு முழு சைவ உணவு பிரியராகிவிட்டேன். இப்போது முன்பைவிட உடல் தகுதியோடு இருக்கிறேன்’ என்றார்.

Related Stories: