×

உருவக்கேலி செய்பவர்களுக்கு சமந்தா சவால்

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை சமந்தா கடைசியாக தமிழில் நடித்த படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. இந்த படத்திற்கு பிறகு தமிழில் போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதால் தெலுங்கு பக்கம் சென்ற சமந்தா தற்போது ‘மா இன்டி பங்காரம்’ என்ற படத்தை தயாரித்து, நடித்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன் மயோசிடிஸ் நோயால் அவதிப்பட்டு வந்த சமந்தா அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறார். இந்நிலையில் படப்பிடிப்புக்கு எங்கு சென்றாலும் தனது உடற்பயிற்சியை மட்டும் நாள்தோறும் தவறாமல் செய்து வருகிறார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் அவ்வப்போது சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார். சமீபகாலமாக உடல் எடையை குறைத்து வரும் சமந்தா பல கிண்டல், கேலிக்கு உள்ளாகி வருகிறார்.

அவரது போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் சிலர் நோய்வாய்ப்பட்டவர் போல் இருக்கிறாரே என உருவக்கேலி செய்கின்றனர். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சமந்தா ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். புல் அப்ஸ் எடுக்கும் போட்டோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள சமந்தா, அதில் ‘‘என்னை, மிகவும் ஒல்லியாக இருக்கிறேன், நோய்வாய்ப்பட்டவர் போல இருக்கிறேன் என்று சொல்பவர்கள் நான் செய்வதை போன்று 3 செட்ஸ் புல் எடுங்கள். அப்படி உங்களால் செய்ய முடியாவிட்டால் என்னை சொன்ன வார்த்தைகள் அனைத்தும் உங்களுக்கே பொருந்தும்’’ என்று சவால் விட்டுள்ளார்.

Tags : Samantha ,
× RELATED ‘பிச்சைக்காரன்‘ பட வாய்ப்பை மிஸ்...