×

ஹீரோவாக மட்டுமே நடிப்பேன்: பிரதீப் ரங்கநாதன் உறுதி

சென்னை: ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம், எஸ்.கணேஷ், எஸ்.சுரேஷ், அர்ச்சனா கல்பாத்தி, ஐஸ்வர்யா கல்பாத்தி ஆகியோர் தயாரித்த படம், ‘டிராகன்’. இதை ‘ஓ மை கடவுளே’ அஷ்வத் மாரிமுத்து எழுதி இயக்கினார். பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின், இவானா, ஜார்ஜ் மரியான் உள்பட பலர் நடித்தனர். இப்படத்தின் 100வது நாள் வெற்றிவிழாவில் பிரதீப் ரங்கநாதன் பேசியதாவது: அஷ்வத் மாரிமுத்து ஒரு கதை சொன்னபோது, ‘ஹீரோவாக மட்டுமே நடிப்பேன்’ என்று சொன்னேன்.

அப்போது நான் ‘கோமாளி’யை இயக்கவில்லை, ‘லவ் டுடே’விலும் நடிக்கவில்லை. என்றாலும், என்மீது அவர் அதிக நம்பிக்கை வைத்தார். பிறகு ‘டிராகன்’ உருவாகி ஹிட்டானது. நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று என்மீது நான் வைத்த நம்பிக்கை, இப்போது ரசிகர்களின் பேரதரவால் நிறைவேறியுள்ளது. ‘கோமாளி’, ‘லவ் டுடே’, ‘டிராகன்’ என்று, தொடர்ந்து எனக்கு 3வது 100 நாட்கள் படம் அமைந்ததை நினைத்து சந்ேதாஷமாக இருக்கிறது. இந்த வெற்றியை தொடர்ந்து ரசிகர்கள் என்னை மிகவும் உயர்ந்த இடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதற்காக அவர்களுக்கு என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.

Tags : Pradeep Ranganathan ,Kalpathi S. Agoram ,S. Ganesh ,S. Suresh ,Archana Kalpathi ,Aishwarya Kalpathi ,AGS Entertainment ,Ashwath Marimuthu ,Kayadu Lohar ,Anupama Parameswaran ,
× RELATED தூக்கம் இல்லாததால் உடல்நிலை பாதிக்கிறது: ராஷ்மிகா கவலை