×

வங்கதேச வன்முறை சம்பவம்: காஜல் அகர்வால், ஜெயப்பிரதா திடீர் ஆவேசம்

மும்பை: பான்வேர்ல்ட் படமான ‘ராமாயணா: பார்ட் 1’ என்ற படத்தில் மண்டோதரி வேடத்தில் நடித்துள்ள காஜல் அகர்வால், மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிக்கும் ‘ஐ அம் கேம்’ என்ற படத்திலும், ‘தி இந்தியா ஸ்டோரி’ என்ற இந்தி படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் வங்கதேசத்தில் இந்து இளைஞர் திபு சந்திர தாஸ் (30) என்பவர் தீ வைத்து கொல்லப்பட்டார். இச்சம்பவத்துக்கு இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் காஜல் அகர்வால் வெளியிட்டுள்ள பதிவில், தீ வைத்து எரிக்கப் பட்ட ஒரு மனிதனின் உடல் கொண்ட போஸ்டருடன், ‘வங்கதேச இந்துக்கள் மீது அனைவரது பார்வையும் இருக்கிறது. இந்துக்களே விழித்தெழுங்கள். அமைதியாக இருப்பது உங்களை ஒருபோதும் காப்பாற்றாது’ என்று ஆவேசத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

நடிகையும், முன்​னாள் எம்​.பியுமான​ ஜெயப்பிரதா விடுத்​துள்ள அறிக்கையில், ‘வங்​கதேசத்​தில் அப்​பாவி திபு சந்​திர​தாஸ் கொடூர​மாக அடித்​து கொல்​லப்​பட்டு எரிக்​கப்​பட்ட சம்​பவம் அதிக மனவேதனையை அளிக்கிறது. இது ஒரு சாதாரண வன்​முறை அல்ல. கொடூரமான படு​கொலை. இது இந்து மதத்​தின் மீதான தாக்​குதல். நம்முடைய கோயில்கள் அழிக்​கப்​படு​கின்​றன. பெண்கள் தாக்கப்​படு​கின்​றனர். எவ்​வளவு காலம் நாம் அமை​தி​யாகவே இருக்க முடி​யும்? வங்​கதேச சிறுபான்​மை​யினருக்​காக குரல் எழுப்பி நாம் உதவி செய்ய வேண்​டும். இந்த கொடூரமான சம்பவத்துக்கு உடனடியாக நாம் உரிய நீதியை கேட்க வேண்​டும்​’ என்று தெரி​வித்​துள்​ளார்​.

Tags : Bangladesh ,Kajal Aggarwal ,Jaya Prada ,Mumbai ,Mandodari ,Panworld ,Dulquer Salmaan ,Thibu Chandra Das ,India ,
× RELATED சவால் விட்ட பிரபாஸ் பட இயக்குனர்