×

விமர்சகர்களின் பாதம் தொட்டு கேட்டுக்கொள்கிறேன்: பாலா உருக்கம்

சென்னை: ஜியோ ஹாட்ஸ்டார், ஜிகேஎஸ் புரொடக்‌ஷன், செவன் சீஸ் அன்ட் செவன் ஹில்ஸ் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்க, ராம் எழுதி இயக்கியுள்ள படம், ‘பறந்து போ’. வரும் ஜூலை 4ம் தேதி திரைக்கு வருகிறது. மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன் ரியான், அஞ்சலி, அஜூ வர்கீஸ், விஜய் யேசுதாஸ் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா, சந்தோஷ் தயாநிதி இசை அமைத்துள்ளனர்.

இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் வெற்றிமாறன், கஸ்தூரிராஜா, விக்ரமன், தனஞ்செயன், சுரேஷ் காமாட்சி, பாலாஜி சக்திவேல், சித்தார்த், சசி, ஏ.எல்.விஜய், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், பாடலாசிரியர் மதன் கார்க்கி, பட்டிமன்ற பேச்சாளர் ராஜா பங்கேற்றனர்.

அப்போது மிக உருக்கமாக பேசிய இயக்குனர் பாலா, ‘இது மிகவும் நல்ல படம். இதை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க, நாம் அனைவரும் சேர்ந்து ஏதாவது செய்ய வேண்டும். இப்படத்தை எப்படியாவது மக்களிடம் கொண்டு போய் சேர்த்து விடுங்கள் என்று, விமர்ச கர்களின் பாதம் தொட்டு கேட்டுக்கொள்கிறேன். ராம் போன்ற இயக்குனர் நம் தமிழ்நாட்டுக்கு வேண்டும்’ என்றார். பிறகு படக்குழு வினர் பேசினார்கள்.

Tags : Chennai ,Ram ,Geo Hotstar ,GKS Productions ,Seven Seas ,Seven Hills Productions ,Mirchi Siva ,Grace Antony ,Master… ,
× RELATED மலையாள சினிமாவில் தாக்கம் ஏற்படுத்திய நடிகர் ஸ்ரீனிவாசன் மரணம்