×

புரட்டாசி பெருந்திருவிழா: தாந்தோணிமலை பெருமாள் கோயிலில் தேரோட்டம்

கரூர்: கரூர் தாந்தோணிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் புரட்டாசி பெருந்திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. தாந்தோணிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் புரட்டாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வுகளான, திருக்கல்யாணம் அக்டோபர் 3ம்தேதி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நேற்று காலை 9மணியளவில் நடைபெற்றது. கோயில் முன்பு துவங்கிய திருத்தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் திருத்தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். 9மணிக்கு துவங்கி 10மணி வரை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக திருத்தேரோட்டம் நடைபெற்றது.இந்த நிகழ்வுகளிலும், அனைத்து சனிக்கிழமை நாட்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் உத்தரவின்பேரில் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்….

The post புரட்டாசி பெருந்திருவிழா: தாந்தோணிமலை பெருமாள் கோயிலில் தேரோட்டம் appeared first on Dinakaran.

Tags : Puratasi ,Peruntrivizha ,Thanthonimalai Perumal Temple ,Karur ,Puratasi Perundruvizha procession ,Thanthonimalai ,Kalyana ,Venkataramana ,Swamy Temple ,Venkatramana… ,Puratasi Peruntrivizha ,
× RELATED சிங்கம்புணரியில் எருதுகட்டு விழா