×

ஸ்ரீதேவி வாழ்க்கை படத்தில் நடிக்கவில்லை; பிரியா வாரியர் விளக்கம்

நடிகை ஸ்ரீதேவி துபாய் சென்றபோது தண்ணீர் தொட்டியில் மூழ்கி இறந்தார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஸ்ரீதேவியின வாழ்க்கை கதையை தயாரிக்க உள்ளதாக அவரது கணவரும், தயாரிப் பாளருமான போனிகபூர் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் ‘ஸ்ரீதேவி பங்களா’ பெயரில் இந்தி படம் உருவானது. இதில், ‘ஒரு அடார் லவ்’ பட டீஸரில் கண்ணடித்து பிரபலம் ஆன பிரியா வாரியர் கதாநாயகியாக நடிக்கிறார்.

ஸ்ரீதேவி பங்களா பட டீஸர் வெளியிடப்பட்ட நிலையில் அதில் ஸ்ரீதேவி பற்றி தவறாக சித்தரிக்கும் காட்சிகள் இருப்பதாகவும், அதை நீக்க வேண்டும் என்றும் பட தயாரிப்பாளருக்கும், பிரியா வாரியருக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் போனிகபூர். இந்நிலையில் இதுகுறித்து பிரியாவாரியர் பதில் அளித்துள்ளார்.

அவர் கூறும்போது,’இது மறைந்த ஸ்ரீதேவி வாழ்க்கையை மையமாக கொண்ட கதை அல்ல. ஸ்ரீதேவி மரணம்பற்றி யாரும் சர்ச்சையாக்க விரும்பமாட்டார் கள். இப்படத்தில் எனது கதாபாத்திரத்தின் பெயர் ஸ்ரீதேவி, அவ்வளவுதான். மற்றடி இப்படம் நிஜத்தில் ஸ்ரீதேவி வாழ்க்கை கதையை தழுவி எடுக்கப்பட்டிருக்கிறதா? இல்லையா? என்பதை ரசிகர்கள் முடிவுக்கு விட்டுவிடுகிறேன்’ என்றார் பிரியா வாரியர்.

Tags : Sridevi ,Priya Warrior ,
× RELATED படம் இயக்க தயாராகிறார் நெப்போலியன்