×

டெல்லி அமைச்சர் ராஜினாமா

புதுடெல்லி: டெல்லியில் கடந்த 5ம் தேதி நடந்த மதமாற்ற நிகழ்ச்சியில் ஏராளமானோர் இந்து மதத்தில் இருந்து புத்த மதத்துக்கு மாறினர். இதில், டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் அரசில் இடம் பெற்றுள்ள அமைச்சர் ராஜேந்திர பால் கவுதமும் பங்கேற்று மதம் மாறினார். மேலும், ‘இந்து கடவுள்களை இனிமேல் வணங்க மாட்டேன்,’ என்றும் உறுதிமொழி ஏற்றார். கவதமின் இந்த செயலுக்கு பாஜ கடும் எதிர்ப்பு தெரிவித்தது.அவரை பதவியில் இருந்து நீக்கும்படி கெஜ்ரிவாலை வலியுறுத்தியது. இந்நிலையில், அமைச்சர் பதவியை கவுதம் நேற்று திடீரென ராஜினாமா செய்தார். டிவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘என்னால் கெஜ்ரிவாலுக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் பிரச்னை ஏற்படுவதை நான் விரும்பவில்லை,‘ என்று கூறியுள்ளார்….

The post டெல்லி அமைச்சர் ராஜினாமா appeared first on Dinakaran.

Tags : Delhi ,Minister ,New Delhi ,Delhi Minister ,Dinakaran ,
× RELATED ஸ்டேபிள் பருத்தி இறக்குமதி வரி முழு விலக்கு: ஒன்றிய அரசு அறிவிப்பு