×

சிக்கன்-65 செய்ய கற்றுக்கொள்ள வேண்டும்: சொல்கிறார் ஷாருக்கான்

சென்னை: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் இரட்டை வேடங்களில் நடித்து வரும் பான் இந்தியா படம், ‘ஜவான்’. ஷாருக்கான் ஜோடியாக நயன்தாரா, வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கின்றனர். ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஷாருக்கான் மனைவி கவுரி கான் தயாரிக்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். இப்படம் வரும் 2023ம் ஆண்டு தியேட்டர்களில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. தற்போது இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் சென்னை அருகிலுள்ள ஸ்டுடியோவில் அமைப்பட்டிருந்த மிகப் பிரமாண்டமான அரங்குகளில் படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது ஷாருக்கானுடன் விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்த சில முக்கியமான காட்சிகளை அட்லீ படமாக்கினார். இதையடுத்து சென்னையில் ஷாருக்கான் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்தது. உடனே அவர் மும்பைக்குக் கிளம்பினார். அப்போது அவர் நெகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ள ஒரு டிவிட்டர் பதிவு வைரலாகியுள்ளது. அவர் கூறியிருப்பதாவது: கடந்த 30 நாட்களாக படக்குழுவினருடன் இணைந்து பணியாற்றியது மிகச்சிறப்பாகவும், மறக்க முடியாத அனுபவமாகவும் இருந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எங்கள் படப்பிடிப்பு நடந்த இடத்துக்கு வந்து எங்களை ஆசிர்வாதம் செய்தார். பிறகு நான் நயன்தாராவுடன் இணைந்து திரைப்படம் பார்த்தது, இசை அமைப்பாளர் அனிருத்துடன் இணைந்து பார்ட்டியில் பங்கேற்றது, விஜய் சேதுபதியுடன் சினிமா சம்பந்தமாக நீண்ட நேரம் உரையாடியது போன்ற நிகழ்வுகளை எப்போதும் மறக்க முடியாது. மேலும், ‘வாரிசு’ படப்பிடிப்பில் இருந்த விஜய் எனக்கு மிக ருசிகரமான சாப்பாடு பரிமாறினார். அட்லீ, அவரது மனைவி பிரியாவின் விருந்தோம்பலுக்கு  மிகவும் நன்றி. விரைவில் நான் சிக்கன்-65 செய்ய கற்றுக் கொள்ள வேண்டும்….

The post சிக்கன்-65 செய்ய கற்றுக்கொள்ள வேண்டும்: சொல்கிறார் ஷாருக்கான் appeared first on Dinakaran.

Tags : Rukh Khan ,CHENNAI ,Shahrukh Khan ,Pan ,Atlee ,Shah Rukh Khan ,Nayanthara ,
× RELATED ஷாருக்கானுடன் மீண்டும் இணைந்த அனிருத்