×

40 வயதை கொண்டாடிய காஜல்

முன்னணி நடிகைகளில் ஒருவரான காஜல் அகர்வால், கடந்த 2020ல் தனது காதலரும், மும்பை தொழிலதிபருமான கவுதம் கிட்ச்லுவை திருமணம் செய்துகொண்டு, மும்பையில் தனிக்குடித்தனம் சென்றார். அவர்களுக்கு நீல் கிட்ச்லு என்ற மகன் இருக்கிறான். திருமணத்துக்கு பிறகு புதுப்பட வாய்ப்பு குறைந்த நிலையில், இந்தியில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகி தோல்வி அடைந்த ‘சிக்கந்தர்’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

தற்போது பான் இந்தியா படமாக உருவாகி, நாளை திரைக்கு வரும் ‘கண்ணப்பா’ என்ற படத்தில் பார்வதி வேடத்தில் நடித்துள்ளார். மேலும் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, ராவணனாக யஷ் நடிக்கும் ‘ராமாயணா’ என்ற 2 பாகங்கள் கொண்ட பன்மொழி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு 40வது பிறந்தநாளை கொண்டாடிய காஜல் அகர்வால், தனது கணவர் மற்றும் மகனுடன் மாலத்தீவுக்கு சென்றிருந்த போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

அதில் கடற்கரையில் பிகினி உடையில் கோடை வெயிலை தணிக்கும் விதமாக கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். மேலும், ‘என்மீது அளவுகடந்த அன்பை செலுத்தி வாழ்த்து தெரிவித்த ரசிகர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றி’ என்று பதிவிட்டுள்ளார். ‘இந்த வயதில் இவ்வளவு கவர்ச்சியா?’ என்று வியந்த நெட்டிசன்கள், அவரது போட்டோக்களை அதிகமாக ஷேர் செய்து கமென்ட் பதிவிட்டுள்ளனர்.

Tags : Kajal ,Kajal Aggarwal ,Mumbai ,Gautam Kitchlu ,Neil Kitchlu ,
× RELATED உடலழகை எடுப்பாக காட்ட வற்புறுத்தினார்கள்: ராதிகா ஆப்தே கடும் தாக்கு