- TWT
- சென்னை
- தமிழ்நாடு மின்சாரம் மற்றும் பகிர்வுக் கழகம்
- ட்விட்டர்
- மின் உற்பத்தி மற்றும் பகிர்வுக் கழகம்
- டெவிட்
- தின மலர்
சென்னை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் டுவிட்டரில் பதிவிட்டுள்ள செய்தி: சமீபகாலமாக மின்நுகர்வோருக்கு இன்றிரவு மின்சார சேவை துண்டிக்கப்படும் என்று குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. மேலும், கட்டணம் செலுத்தியிருந்தாலும் அபராதத்தை தவிர்க்க வாட்ஸ் ஆப் செயலியில் போலி லிங்குகள் வழி குறிப்பிட்ட கைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இதுபோன்ற ஏமாற்று செயல்களின் வாயிலாக நுகர்வோர்களின் வங்கி கணக்கிலிருந்து பண மோசடிகள் நடைபெற்று வருகிறது.எனவே, மின் இணைப்பு துண்டிக்கப்படும் என வரும் மோசடி குறுஞ்செய்திகளை புறக்கணித்து விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். மின் இணைப்பின் நிலை மற்றும் மின் கட்டண தகவல்களை தமிழ்நாடு மின்சார வாரியம் அதிகாரப்பூர்வ இணையத்தளமான tangedco.orgல் சரிபார்த்து கொள்ளலாம். எனவே, மோசடியாக வரும் எண்களுக்கு பதிலளிக்கவோ அல்லது திரும்ப அழைக்கவோ வேண்டாம். மேலும் 1930 சைபர் குற்ற உதவி எண்ணிற்கு மின் நுகர்வோர் தங்களது புகார்களை தெரிவிக்கலாம். …
The post மின்சாரம் துண்டிக்கப்படும் என வரும் குறுஞ்செய்தியை நம்ப வேண்டாம்; மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் டுவிட் appeared first on Dinakaran.
