×

1984ல் சீக்கியர்கள் மீது தாக்குதல் இந்திய வரலாற்றின் இருண்ட ஆண்டு: அமெரிக்க எம்பி பேச்சு

வாஷிங்டன்: ‘இந்தியாவில் சீக்கியர்கள் மீது நடத்திய தாக்குதல் அதன் வரலாற்றின் இருண்ட ஆண்டாகும்’ என்று அமெரிக்க செனட் எம்பி தெரிவித்தார். இந்திய பிரதமராக இருந்த இந்திரா காந்தி 1984ம் ஆண்டு அவரது சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து, டெல்லி உள்பட நாடு முழுவதும் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 3,000 சீக்கியர்கள் பலாத்காரம் செய்தும், வெட்டியும் கொல்லப்பட்டனர். இந்நிலையில், அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவையில் பேசிய பென்சில்வேனியா எம்பி பாட் டூமே, “பஞ்சாபை சேர்ந்த சீக்கிய சமூகத்தினருக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையே கடந்த 1984ம் ஆண்டு முதல் பல ஆண்டுகளாக நீடித்து வரும் பிரச்னை குறித்து பேசவே இங்கு கூடியுள்ளோம். நவீன இந்தியாவின் வரலாற்றில் சீக்கியர் மீது நடத்திய தாக்குதல் ஓர் கருப்பு தினமாகும். இந்தியாவில் பல்வேறு சமூகத்தினரின் மீது குறிப்பாக சீக்கியர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதை பார்த்திருக்கிறோம். இது போன்று எதிர்காலத்தில் மனித உரிமைகள் நசுக்கப்படுவதை தடுக்க, அங்கு என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அப்போது தான் சீக்கியர்களுக்கு மட்டுமன்றி உலகம் முழுவதிலும் இது போன்று வேறு எந்த சமூகத்தினருக்கு எதுவும் நேராது என்பது உறுதிப்படுத்தபடும்,’’ என்று தெரிவித்தார்….

The post 1984ல் சீக்கியர்கள் மீது தாக்குதல் இந்திய வரலாற்றின் இருண்ட ஆண்டு: அமெரிக்க எம்பி பேச்சு appeared first on Dinakaran.

Tags : on Sikhs ,Year ,US ,Washington ,Sikhs ,India ,US Senate ,
× RELATED பழைய பஸ் பாஸிலேயே மாணவர்கள் பயணிக்கலாம்: போக்குவரத்து துறை தகவல்