×

செட்டியபட்டி, சத்திரப்பட்டியில் நடைபெற்ற கிராமசபை கூட்டங்களில் அமைச்சர்கள் பங்கேற்பு-மக்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என உறுதி

சின்னாளபட்டி/ஒட்டன்சத்திரம் : திண்டுக்கல் மாவட்டங்களில் நடைபெற்ற கிராமசபை கூட்டங்களில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி பங்கேற்றனர்.ஆத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 22 கிராம ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேற்று சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது. செட்டியபட்டி ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்திற்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் மகேஷ்வரிமுருகேசன், துணைத்தலைவர் ஹேமலதா மணிகண்டன், ஒன்றிய செயலாளர்கள் பிள்ளையார்நத்தம் முருகேசன், பாறைப்பட்டி ராமன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தட்சிணாமூர்த்தி, ஏழுமலையான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் டி.ராஜா வரவேற்று பேசினார்.கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசுகையில், கிராமங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது கிராம சபை கூட்டங்களே. கிராமத்தின் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் கிராம சபைக் கூட்டங்களில் எடுக்கப்படும் முடிவுகள் கிராம வளர்ச்சிக்கு உதவுவதால் சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்த ஊராட்சியை சேர்ந்த பொதுமக்களின் அனைத்து கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்றப்படும் என்றார்.கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ரெங்கராஜன், திமுக செயற்குழு உறுப்பினர்கள் தண்டபாணி, ஆத்தூர் நடராஜன், மாவட்ட பொருளாளர் சத்தியமூர்த்தி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாஸ்கரன், ஒன்றிய துணைச் செயலாளர் எம்.சி.பாண்டியன், சின்னாளபட்டி பேரூர் கழக முன்னாள் செயலாளர் அறிவழகன், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் அரவிந்தன், குழு உறுப்பினர்கள் நாகவள்ளி, செல்விகாங்கேயன், ஊராட்சி மன்றத் துணைத்தலைவர்கள் பழனி, வார்டு உறுப்பினர்கள் மாரியம்மாள், பொம்முத்தாய், ஜான்சிபொன்மலர், ராமேஷ்வரி, பீமன்ரவி, ஊராட்சி செயலாளர் வேல்முருகன், திமுக நிர்வாகிகள் அம்பை ரவி, செட்டியபட்டி வை.கோ.முருகன், அஞ்சுகம் காலனி பர்குணன், செட்டியபட்டி பிரிவு சரண்துரைப்பாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இதேபோல் ஒட்டன்சத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட சத்திரப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராமசபை கூட்டம் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் தினேஷ்குமார், வருவாய் கோட்டாட்சியர் சிவக்குமார், வட்டாட்சியர் முத்துச்சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காமராஜ், அந்தோணியார், ஒன்றிய செயலாளர் தர்மராஜன், ஒன்றிய தலைவர் அய்யம்மாள், துணை தலைவர் காயத்திரிதேவி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சங்கீதா பழனிச்சாமி, ஒன்றிய கவுன்சிலர் ரேவதிசேகர், ஊராட்சிமன்ற தலைவர் சாரதாசிவராஜ், துணைத்தலைவர் முருகானந்தம், ஊராட்சி செயலர் லட்சுமணசாமி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அசோக்வேலுச்சாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.ரெட்டியபட்டியில் ஊராட்சிமன்ற தலைவர் ரெத்தினம் மா.செல்வராஜ் தலைமையில் கிராமசபைக்கூட்டம் நடைபெற்றது. இதில் துணைத்தலைவர் முருகன், ஊராட்சி செயலர் ஈஸ்வரன் உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். ஜோகிபட்டி ஊராட்சிமன்ற தலைவர் சுப்பிரமணி தலைமையில் கிராமசபைக்கூட்டம் நடைபெற்றது. இதில் துணை தலைவர் கருணாநிதி, ஊராட்சி செயலர் சரவணன் உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள், மக்கள் நல பணியாளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.காளாஞ்சிபட்டியில் ஊராட்சிமன்ற தலைவர் அமுதா தலைமையில் ஒன்றிய அவைத்தலைவர் செல்வராஜ், துணைத்தலைவர் கௌரி, ஊராட்சி செயலர் மகுடீஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.தங்கச்சியம்மாபட்டியில் ஊராட்சிமன்ற தலைவர் முருகானந்தம் தலைமையில் ஒன்றிய கவுன்சிலர் நாச்சிமுத்து, ஊராட்சி செயலர் மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.வடகாடு ஊராட்சியில் ஊராட்சிமன்ற தலைவர் தனலட்சுமி தலைமையில் ஒன்றிய துணைச் செயலாளர் சிவக்குமார், துணைத்தலைவர் பிரபாவதி, ஊராட்சி செயலர் சிவக்குமார் கலந்துகொண்டனர்.ஐ.வாடிப்பட்டியில் ஊராட்சிமன்ற தலைவர் ஜோதீஸ்வரன் தலைமையில் துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.கொ.கீரனூரில் ஊராட்சிமன்ற தலைவர் விஜயலட்சுமிசண்முகசுந்தர் தலைமையில் துணைத்தலைவர் தங்கராஜ், ஊராட்சி செயலர் தங்கவேல் கலந்துகொண்டனர்.குத்திலிப்பை ஊராட்சியில் ஊராட்சிமன்ற தலைவர் லட்சுமிராஜசேகரன் தலைமையில் துணைத்தலைவர் செந்தில்வடிவு, ஊராட்சி செயலர் அஜிதா கலந்துகொண்டனர்.லெக்கையன்கோட்டையில் ஊராட்சிமன்ற தலைவர் செல்லம்மாள் தண்டபாணி தலைமையில் துணைத்தலைவர் குழந்தைவேல், ஊராட்சி செயலர் நல்லையா உள்ளிட்டு வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்….

The post செட்டியபட்டி, சத்திரப்பட்டியில் நடைபெற்ற கிராமசபை கூட்டங்களில் அமைச்சர்கள் பங்கேற்பு-மக்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என உறுதி appeared first on Dinakaran.

Tags : Gram Sabha ,Chetiyapatti ,Chhatrapatti ,Chinnalapatti ,Ottanchattaram ,Ministers ,I. Periyasamy ,A. Chakrapani ,Dindigul districts ,Attur Union… ,
× RELATED பொதுமக்கள் மகிழ்ச்சி விராலிமலை அருகே...