×

தனுஷை புகழ்ந்த சாய் பல்லவி

தேசிய விருது பெற்ற சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜூனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் உள்பட பலர் நடித்து, கடந்த 20ம் தேதி தெலுங்கு மற்றும் தமிழில் திரைக்கு வந்த படம், ‘குபேரா’. இதில் தனுஷின் நடிப்பு பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்நிலையில் சாய் பல்லவி வெளியிட்டுள்ள ஒரு பதிவில், ‘குபேரா’ படத்தை மனம் திறந்து பாராட்டியுள்ளார். அவரது பதிவில், ‘சேகர் கம்முலா இயக்கியுள்ள ‘குபேரா’ சிறப்பான படமாக இருக்க பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

சவாலான கதாபாத்திர தேர்வின் மூலம் தனுஷ், தனது மாஸ்டர் கிளாஸ் நடிப்பை எளிதாக திரையில் வெளிப்படுத்தி இருக்கிறார். சேகர் கம்முலா இயக்கத்தில் நாகார்ஜூனா சாரை இப்படியொரு கேரக்டரில் பார்ப்பது விருந்து போல் இருக்கிறது. எப்போதுமே சேகர் கம்முலா தனது படங்களில் பெண் கதாபாத்திரங்களை எவ்வளவு வலுவாக எழுதுவார் என்று நமக்கு தெரியும். ‘குபேரா’ படத்தில் ஏற்றிருக்கும் கேரக்டர், உங்கள் திரை வாழ்க்கையில் மறக்க முடியாததாகவும், உங்கள் பிளாக்பஸ்டர் வரிசையில் மிகப்பெரிய ஒரு வெற்றிப் படமாகவும் அமையும்.

ராக்ஸ்டார் டிஎஸ்பியின் (தேவி பிரசாத்) வெற்றி கிரீடத்தில் மற்றும் ஒரு ரத்தினமாக படம் அமையும். படக்குழுவினரின் வியர்வையும், ரத்தமும் அங்கீகரிக்கப்படும். அவையெல்லாம் அடுத்தடுத்து பாராட்டுகளாக மாறும். சேகர் கம்முலா இந்த தலைமுறையின் உத்வேகம். நானும் அதில் ஒருத்தி. நீங்கள் நல்ல உடல்நலத்துடன் இருந்து, தொடர்ந்து இதுபோன்ற கதைகளை ஏராளமாக உருவாக்க வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : Sai Pallavi ,Dhanush ,Shekhar Kammula ,Nagarjuna ,Rashmika Mandanna ,Jim Sarf ,
× RELATED மலையாள சினிமாவில் தாக்கம் ஏற்படுத்திய நடிகர் ஸ்ரீனிவாசன் மரணம்