சர்வதேச யோகா தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நமீதா, யோகாசனத்தின் சிறப்புகள் குறித்து பேசினார். அவர் பேசுகையில், ‘இந்தியாவில் தோன்றிய யோகா, 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. ஆனால், கடந்த 2007ல் பாலிவுட் முன்னணி நடிகை கரீனா கபூர், தன் உடல் கட்டுப்பாட்டுக்கு யோகாதான் காரணம் என்று சொன்ன பிறகுதான் மிகவும் பிரபலமானது. யோகா நமது நாட்டின் கலாசாரம், பாரம்பரியத்தில் கலந்து இருக்கிறது. அது நமது பெருமை. நான் யோகா செய்தது இல்லை. என் பெற்றோருக்கு அதுபற்றிய சரியான புரிதல் இல்லை.
நம் குழந்தைகளுக்கு ஆங்கிலம் தெரிந்திருப்பதை விட, தாய்மொழி தெரிந்திருப்பதுதான் அவசியம். என் குழந்தைகளுக்கு தமிழ், தெலுங்கு, குஜராத்தி ஆகிய மொழிகள் தெரியும். என் குழந்தைக்கு ஸ்பைடர் மேன், சூப்பர் மேன் ஆகியோர் குறித்து எதுவும் தெரியாது. இதை நான் பெருமையாகவே சொல்லிக்கொள்கிறேன்’ என்றார். அவரது இயல்பான பேச்சு இப்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி நெட்டிசன்கள் கமென்ட் வெளியிட்டு வருகின்றனர்.
