×

8 வார்டுகளில் கூட்டணியுடன் வெற்றி கடம்பூர் பேரூராட்சியை திமுக கைப்பற்றியது

கயத்தாறு: கடம்பூர் பேரூராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது. மொத்தமுள்ள 12 வார்டுகளில் 8 வார்டுகளில் திமுக கூட்டணி வென்றுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு தாலுகாவில் உள்ள கடம்பூர் பேரூராட்சியின் 3 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். மற்ற 9 வார்டுகளுக்கு தேர்தல் உயர்நீதிமன்ற உத்தரவின்படி கடந்த மாதம் 29ம் தேதி நடந்தது. வார்டுகளில் திமுக சார்பில் 7 வேட்பாளர்களும், காங்கிரஸ், மதிமுக சார்பில் தலா ஒரு வேட்பாளரும், பாஜ சார்பில் ஒரு வேட்பாளரும், சுயேச்சைகள் 13 பேர் என மொத்தம் 23 பேர் போட்டியிட்டனர். 9 வார்டுகளில் மொத்தமுள்ள 2,470 வாக்குகளில் 1,598 வாக்குகள் என 65 சதவீதம் வாக்குகள் பதிவானது. இந்த 9 வார்டுகளில் பதிவான வாக்குகள் கயத்தார் வீரபாண்டிய கட்டபொம்மன் பள்ளியில் நேற்று காலை 8 மணிக்கு எண்ணப்பட்டன. இதில் திமுக 6 வார்டுகளையும், காங்கிரஸ், மதிமுக, சுயேச்சை தலா ஒரு வார்டையும் வென்றன. 8 வார்டுகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றதன் மூலம் கடம்பூர் பேரூராட்சியை திமுக கூட்டணி கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் முதன்முதலாக  கடம்பூர் பேரூராட்சியை திமுக கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.  …

The post 8 வார்டுகளில் கூட்டணியுடன் வெற்றி கடம்பூர் பேரூராட்சியை திமுக கைப்பற்றியது appeared first on Dinakaran.

Tags : DMK ,Kadampur ,Gayathur ,Thoothukudi district ,Dinakaran ,
× RELATED திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்