தோல் நிறம் சிவப்பாக இருப்பது அழகல்ல... தமன்னா தடாலடி

கோலிவுட் ஹீரோயின்களில் ஒரு சிலரை தவிர பலர் சிவப்பு நிறம்தான். குறிப்பாக தமன்னாவின் நிறம் திரையுலகினர் மத்தியில் மட்டுமல்லாமல் பெண்கள் மத்தியிலும் பேசப்படும். ஆனால் தமன்னாவுக்கு தனது சிவந்த நிறம்பற்றி மாற்றுக்கருத்து உள்ளது. சிவப்பாக இருப்பது அழகல்ல. சிவப்பாக இருப்பதுதான் அழகு என்று சொன்னால் அது ஆபத்தானது என கூறியிருக்கிறார். விஜய் இயக்கத்தில் தேவி 2ம் பாகத்தில் நடிக்கிறார் தமன்னா.

அதேபோல் சிரஞ்சீவி நடிக்கும் சே ரா நரசிம்ம ரெட்டி தெலுங்கு படத்திலும் நடிக்கிறார். இந்த 2 படங்களிலும் தமன்னாவின் நிறத்தை டல்லாக்கி அதாவது ஒரிஜினல் சிவப்பு நிறத்தை சற்று கருப்பாக மேக்அப் போட்டு நடிக்க வைத்திருக்கிறார்கள். இதுபற்றி தமன்னா கூறியதாவது: உடலின் தோல் நிறத்தை வைத்து ஒரு நபரை பற்றி முடிவு செய்வதை நான் ஏற்க மாட்டேன். நான் பிறக்கும்போதே சிவப்புதான்.

ஆனால் எனக்கு கறுப்பு, மாநிறம்தான் பிடிக்கும். சில படங்களில் இயக்குனர்கள் எனது நிறத்தை குறைக்க கேட்டுக்கொண்டால் அதுபற்றி யோசிக்காமல் உடனடியாக நிறத்தை குறைத்துக்கொள்ள ஒப்புக்கொள்வேன். இதை ஏதோ ஒரு அற்புதத்தை நான் செய்வதாக எண்ணுவதில்லை. சினிமாத்தனமான எண்ணத்தை உடைக்க விரும்புகிறேன். நிறத்தை வைத்து அழகை நிர்ணயிப்பதை நிறுத்திக்கொள்வதற்கான தருணம் இது.

நீங்கள் மற்ற யாரையும் விட கலராக, அழகாக இருக்கலாம். ஆனால் குரூரமான மனம் இருந்தால் அவர்கள் அழகானவர்கள் கிடையாது. நிறத்தை வைத்து மனிதர்களை எடைபோடுவது ஆபத்தானது. சினிமாவில் என் நிறத்தை வைத்தோ, ஆடையை வைத்தோ என்னை பாராட்டுவதைவிட நடிப்பை வைத்து பாராட்டுவதுதான் உண்மையான பாராட்டு என்று நம்புகிறேன். இவ்வாறு தமன்னா கூறினார்.

Tags : Tamanna ,
× RELATED அரசு, நிதியுதவி பள்ளி மாணவர்களுக்கு...