செக்ஸ் பற்றி பெண்கள் ஏன் பேசக்கூடாது? தமன்னா கிடுக்கிப்பிடி

தமன்னாவை பொறுத்தவரை பிரபல ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுக்கு முன் வெளியான பாகுபலி 2ம் பாகத்தில் தனக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என்பதால் அப்செட் ஆனார். தனது ஆதங்கத்தை வெளிப்படையாகவும் தெரிவித்தார். ஆனாலும் அவருக்கு வரவேண்டிய பட வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. பல ஹீரோயின்கள் வாய்ப்பு குறையும் நேரத்தில் அல்லது மார்க்கெட் ஓய்ந்த நிலையில் படுகவர்ச்சி காட்சிகளில் நடிப்பதுடன் செக்ஸ் பற்றி வெளிப்படையாக பேசி பரபரப்பை ஏற்படுத்துகின்றனர்.

தமன்னாவுக்கு மார்க்கெட் ஸ்ெடடியாக இருக்கும்நிலையில் சமீபகாலமாக அவர் செக்ஸ் பற்றி துணிச்சலாக கருத்து தெரிவித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் தமன்னா அளித்த பேட்டி ஒன்றில், ‘லிப் டு லிப் முத்தக்காட்சியில் நடிக்க நான் தயாராக இருக்கிறேன். ஆனால் அதுபோன்ற கதை எனக்கு எதுவும் வரவில்லை, லிப் டு லிப் முத்தக்காட்சியில் நடிக்க எந்த இயக்குனரும் என்னிடம் கேட்கவில்லை’ என்று பேட்டி அளித்து இன்ப அதிர்ச்சி தந்தார். இந்நிலையில் செக்ஸ் பற்றி பேசியிருக்கிறார்.

இதுபற்றி அவர் கூறும்போது,’ஆண் பெண் உறவு பற்றி பெண்கள் வெளிப்படையாக பேசக்கூடாது என்கிறார்கள்? அப்படி சொல்வது ஏன் என்று எனக்கு புரியவில்லை. பெண்களுக்கு மட்டும் எதற்காக இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கிறார்கள். நம் நாட்டில் ஆண்களைவிட பெண்களுக்கு அதிக அளவில் பாகுபாடு காட்டப்படுகிறது. செக்ஸ் மற்றும் அதுசம்பந்தமான சப்ஜெக்ட் பற்றி பேசுவதற்கு பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை’ என்றார் தமன்னா. ஆபாச காட்சிகளில் நடிக்க மறுப்பு தெரிவித்து வந்த தமன்னா திடீரென்று செக்ஸ் விவகாரம்பற்றி வெளிப்படையாக பேசி வருவது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

Tags : Tamanna Kudukkipudi ,
× RELATED விஜய்க்கு இறுக்கி அணைச்சி முத்தம் தந்த விஜய்சேதுபதி