×

ஆக்‌ஷன், அமானுஷ்யம் கலந்த கரிகாடன்

சென்னை: கன்னடத்தில் இருந்து தமிழில் வெளியாகவிருக்கும் படம் ‘கரிகாடன்’. ஆக்ஷனும் அமானுஷ்யமும் நிறைந்த ஒரு பரபரப்பான திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தில் காடா நடராஜ்,நிரிக்ஷா ஷெட்டி,குழந்தை ரித்தி, மஞ்சு சுவாமி,யாஷ் ஷெட்டி, கோவிந்த கவுடா,திவாகர் மற்றும் பலர் நடித்துள்ளனர். திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் கில்லி வெங்கடேஷ். இசை – அதிஷய் ஜெயின், மற்றும் ஷஷாங்க் சேஷகிரி. ஒளிப்பதிவு – ஜீவன் கவுடா. எடிட்டிங் – தீபக் சி.எஸ். ரித்தி எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் தீப்தி தாமோதர் தயாரித்துள்ளார். இணைத் தயாரிப்பை ரவிக்குமார் எஸ்.ஆர். கவனித்துள்ளார். ‘‘கார்ப்பரேட் உலகத்தைச் சேர்ந்த ஆர்வமுள்ள கலைஞரான கடா நட்ராஜ், தனது கனவைப் பெரிய திரையில் நனவாக்க வந்துள்ளார். இந்தப் படத்தின் கதையை எழுதியுள்ள காடா நடராஜ் கவனமாக திட்டமிடப்பட்டு படப்பிடிப்பை முடித்தார்’’ என படக்குழு தெரிவித்துள்ளது.

Tags : Chennai ,Kannada ,Gaada Nataraj ,Niriksha Shetty ,Kuzanthai Rithi ,Manju Swamy ,Yash Shetty ,Govinda Gowda ,Divakar ,
× RELATED ‘உங்க படத்துல உதவி இயக்குனரா வேலை...