×

வாகனங்கள் விலை உயர்வு

வாகனங்களின் விலையை நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. எம்ஜி நிறுவனம் ஹெக்டார், ஹெக்டார் பிளஸ், ஆஸ்டார் விலையை அதிகரிக்கப்பட்டுள்ளது. இவற்றின் விலை உயர்த்தப்படுவது இந்த ஆண்டில் 2வது முறையாகும். ஹெக்டார் விலை ரூ.20,000 முதல் ரூ.28,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து வேரியண்ட்களுக்கு ஏற்ப பெட்ரோல் கார் துவக்க ஷோரூம் விலை ரூ.14.43 லட்சம் முதல் ரூ.19.73 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டீசல் கார் ரூ.15.97 லட்சம் முதல் ரூ.20.36 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதுபோல் ஹெக்டார் பிளஸ் வேரியண்ட்களுக்கு  ஏற்பட ரூ.25,000 முதல் ரூ.28,000 வரை உயர்த்தப்பட்டு, ரூ.18.9 லட்சம் முதல் ரூ.20.35 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அஸ்டார் வேரியண்ட் ஒரு சில மாடல்களுக்கு ரூ.10,000 அதிகரிக்கப்பட்டு, துவக்க விலையாக ரூ.10.32 லட்சமாகவும், டாப் வேரியண்ட் ரூ.18.23 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹீரோ மோட்டார் கார்ப்பரேஷன் டூவீலர்களின் விலையை உயர்த்தி உள்ளது.கடந்த ஓராண்டுக்குள் இந்த நிறுவனம் அறிவித்துள்ள ஐந்தாவது விலை உயர்வு இது. நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி அனைத்து மாடல்களும் தலா ரூ.1000 வீதம் அதிகரிக்கப் பட்டுள்ளது.மகிந்திரா நிறுவனம் பொலிரோ பி4 வேரியண்ட் விலையை ரூ.20,701, பி6 வேரியண்ட் விலை ரூ.22,000 அதிகரித்துள்ளது. இதுபோல், பொலிரோ என்4 ரூ.18,800, என் 10 ரூ.21,007 மற்றும் என்10 (ஓ) ரூ.20,502 உயர்த்தியுள்ளது. இது இந்த ஆண்டில்  நிறுவனம் மேற்கண்ட வாகனங்களுக்கு அறிவித்துள்ள 3வது விலை உயர்வாகும். சமீபத்தில்தான் எக்ஸ்யுவி700 விலையை ரூ.37,000 வரையிலும், தார் விலையை ரூ.28,000 வரையிலும் உயர்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. உற்பத்தி செலவுகள் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் விலை உயர்த்தப்பட்டு வருகிறது….

The post வாகனங்கள் விலை உயர்வு appeared first on Dinakaran.

Tags : MG ,Hector ,Astar ,Dinakaran ,
× RELATED இரணியலில் 32 மி.மீ மழை பதிவு